• Apr 30 2026

தமிழகத்தில் ஆட்சியை மீண்டும் திமுக பிடிக்குமா?

shanu / Apr 30th 2026, 10:06 am
image

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பின்னரான கருத்​துக் கணிப்​பு​களில் தமிழகத்​தில் பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தக்க வைக்​கும். புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி  ஆட்சி தொடரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


தமிழகத்​தில் 234 தொகு​தி​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு கடந்த ஏப்​ரல் 23ஆம் திகதி நடை​பெற்​றது. ஆளும் கட்​சி​யான திமுக, பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக, முதல் முறை​யாகத் தேர்​தலைச் சந்​திக்​கும் விஜய்​யின் தவெக மற்​றும் சீமானின் நாதக என 4 முனைப் போட்டி நில​வியது. 


இதில் திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் திமுக 164, காங்​கிரஸ் 28, தேமு​திக 10, விசிக 8, மார்க்​சிஸ்ட் 5, இந்​திய கம்​யூனிஸ்ட் 5, மதி​முக 4, ஐயூஎம்​எல் 2, கொமதேக 2, மமக 2, மஜக, முக்​குலத்​தோர் புலிப்​படை, எஸ்​டிபிஐ, தமிழர் தேசம் கட்சி தலா ஒரு தொகு​தி​யில் களம் கண்​டன.


அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் அதி​முக 166, பாஜக 26, பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்​சி, சிங்​கத் தமிழர் முன்​னேற்​றக் கழகம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ், தென்​னிந்​திய பார்​வர்ட் பிளாக், தமமுக தலா ஒரு தொகு​தி​யில் போட்​டி​யிட்​டன. சசிகலா - ராம​தாஸ் கூட்​ட​ணி​யில் அகில இந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் (சசிகலா) - 71, அய்யா பாட்​டாளி மக்​கள் கட்சி (ராம​தாஸ்) - 38, பசும்​பொன் மக்​கள் தேசம் - 2, வேளாளர் முன்​னேற்​றக் கழகம் - 1, இதரக் கட்​சிகள் 8 இடங்​களில் போட்​டி​யிட்​டன.


முதல் முறை​யாக தேர்​தலைச் சந்​தித்த நடிகர் விஜய்​யின் தவெக 233 தொகு​தி​களில் தனித்​துப் போட்​டி​யிட்​டது. சேலம் மாவட்​டம் எடப்​பாடி தொகு​தி​யில் மட்​டும் ஒரு சுயேச்சை வேட்​பாள​ருக்கு தனது ஆதரவை வழங்​கி​யுள்​ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகு​தி​களி​லும் தனித்து களம் கண்​டுள்​ளது. தமிழக வாழ்​வுரிமை கட்சி (வேல்​முரு​கன்) 170 தொகு​தி​கள், புதிய தமிழகம் (கிருஷ்ண​சாமி) 70 தொகு​தி​கள், பகுஜன் சமாஜ் கட்சி 118 இடங்​களில் போட்டியிட்​டன.


இந்​நிலை​யில் 234 தொகு​தி​களுக்​கான வாக்கு எண்​ணிக்கை 62 மையங்​களில் வரும் மே 4அம் திகதி காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது. அன்று 


பிற்​பகலுக்குள் யார் ஆட்​சி​யில் அமர்​வார் என்​ப​தற்​கான முடிவு​கள் தெரிய வரும். இதற்​கிடை​யில் மேற்கு வங்​கத்​தின் 2ஆம் கட்ட தேர்​தல் முடிந்​ததையடுத்​து, நேற்று மாலை 6.30 மணிக்கு தேர்​தலுக்​குப் பின்னரான கருத்​துக் கணிப்பு முடிவு​கள் வெளி​யா​யின.


இதில் தமிழகத்​தைப் பொறுத்​தவரை பல்​வேறு நிறு​வனங்​களின் கணிப்​பில் பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தொடரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


குறிப்​பாக சாணக்​கியா ஸ்ட்​ராடஜிஸ், என்​டிடி​வி, ரிபப்​ளிக் டிவி கருத்​துக் கணிப்​பின்​படி திமுக தலை​மையி​லான கூட்​டணி பெரும்​பான்மை இடங்​களைப் பெறும் எனவும், டைம்ஸ் நவ், சிஎன்​என் கணிப்​பில் அதி​முக ஆட்​சி​யைப் பிடிக்​கும் எனவும், இந்​தியா டுடே முடிவு​களில் தவெக முன்னிலை வகிக்​கும் என்றும், காமாக்யா கணிப்​பில் தொங்கு சட்​டப்​ பேரவைக்கான வாய்ப்​பு இருப்​ப​தாக​ கூறப்​பட்​டுள்​ளது.


புதுச்சேரி நிலவரம்: புதுச்​சேரி யூனியன் பிரதேசத்​தில் 30 தொகு​தி​கள் உள்​ளன. தற்​போது ஆட்​சி​யில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் என்​.ஆர். காங்​கிரஸ் 16, பாஜக 10, அதி​முக 2, லஜக 2 இடங்​களில் போட்​டி​யிட்​டன. இண்​டியா கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் 16, திமுக 13, விடு​தலைச் சிறுத்​தைகள் ஒரு இடம் என போட்​டி​யிட்​டன. 


ஒரு​மித்த கருத்து இல்​லாத​தால் இண்​டியா கூட்​ட​ணி​யில் இடம்பெற்​றிருந்த இந்​திய கம்​யூனிஸ்ட் ஒரு தொகு​தி​யிலும், மார்க்​சிஸ்ட் 2 தொகு​தி​களி​லும் தனி​யாக போட்​டி​யிட்​டன. திமுக போட்​டி​யிடும் 5 தொகு​தி​கள், விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் ஒரு தொகுதி என 6 இடங்​களில்      காங்​கிரஸ் போட்டி வேட்​பாளர்​கள் கை சின்​னத்​திலேயே களம் இறங்​கினர்.


அதே​போல், விஜய்​யின் தவெக புதுச்​சேரி​யில் நேயம் மக்​கள் கழகத்​துடன் கூட்​டணி அமைத்​துள்​ளது. தவெக 28 இடங்​களி​லும், நேயம் மக்​கள் கழகம் 2      இடங்​களி​லும் போட்​டி​யிட்​டன. நாம் தமிழர் கட்சி புதுச்​சேரி, காரைக்​காலில் 28 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. மாஹே, ஏனாமில் போட்​டி​யிடு​வதை இம்​முறை​யும் புறக்​கணித்​தது.


புதுச்​சேரியிலும் வாக்கு எண்​ணிக்​கை​ வரும் 4ஆம் திகதி நடை​பெறவுள்​ளது. நேற்று வெளி​யான தேர்​தலுக்​குப் பின்னரான கருத்​துக் கணிப்​பு​கள் அனைத்​தும் என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​யைத் தக்கவைக்​கும் என்று தெரி​வித்​துள்​ளன. எனினும், தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் யார் ஆட்​சியை பிடிப்​பார் என்ற முழு நில​வரம்​ மே 4ஆம் திகதி தெரிய வரும்​.

தமிழகத்தில் ஆட்சியை மீண்டும் திமுக பிடிக்குமா தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பின்னரான கருத்​துக் கணிப்​பு​களில் தமிழகத்​தில் பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தக்க வைக்​கும். புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி  ஆட்சி தொடரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.தமிழகத்​தில் 234 தொகு​தி​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு கடந்த ஏப்​ரல் 23ஆம் திகதி நடை​பெற்​றது. ஆளும் கட்​சி​யான திமுக, பிர​தான எதிர்க்​கட்​சி​யான அதி​முக, முதல் முறை​யாகத் தேர்​தலைச் சந்​திக்​கும் விஜய்​யின் தவெக மற்​றும் சீமானின் நாதக என 4 முனைப் போட்டி நில​வியது. இதில் திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் திமுக 164, காங்​கிரஸ் 28, தேமு​திக 10, விசிக 8, மார்க்​சிஸ்ட் 5, இந்​திய கம்​யூனிஸ்ட் 5, மதி​முக 4, ஐயூஎம்​எல் 2, கொமதேக 2, மமக 2, மஜக, முக்​குலத்​தோர் புலிப்​படை, எஸ்​டிபிஐ, தமிழர் தேசம் கட்சி தலா ஒரு தொகு​தி​யில் களம் கண்​டன.அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் அதி​முக 166, பாஜக 26, பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்​சி, சிங்​கத் தமிழர் முன்​னேற்​றக் கழகம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ், தென்​னிந்​திய பார்​வர்ட் பிளாக், தமமுக தலா ஒரு தொகு​தி​யில் போட்​டி​யிட்​டன. சசிகலா - ராம​தாஸ் கூட்​ட​ணி​யில் அகில இந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் (சசிகலா) - 71, அய்யா பாட்​டாளி மக்​கள் கட்சி (ராம​தாஸ்) - 38, பசும்​பொன் மக்​கள் தேசம் - 2, வேளாளர் முன்​னேற்​றக் கழகம் - 1, இதரக் கட்​சிகள் 8 இடங்​களில் போட்​டி​யிட்​டன.முதல் முறை​யாக தேர்​தலைச் சந்​தித்த நடிகர் விஜய்​யின் தவெக 233 தொகு​தி​களில் தனித்​துப் போட்​டி​யிட்​டது. சேலம் மாவட்​டம் எடப்​பாடி தொகு​தி​யில் மட்​டும் ஒரு சுயேச்சை வேட்​பாள​ருக்கு தனது ஆதரவை வழங்​கி​யுள்​ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகு​தி​களி​லும் தனித்து களம் கண்​டுள்​ளது. தமிழக வாழ்​வுரிமை கட்சி (வேல்​முரு​கன்) 170 தொகு​தி​கள், புதிய தமிழகம் (கிருஷ்ண​சாமி) 70 தொகு​தி​கள், பகுஜன் சமாஜ் கட்சி 118 இடங்​களில் போட்டியிட்​டன.இந்​நிலை​யில் 234 தொகு​தி​களுக்​கான வாக்கு எண்​ணிக்கை 62 மையங்​களில் வரும் மே 4அம் திகதி காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது. அன்று பிற்​பகலுக்குள் யார் ஆட்​சி​யில் அமர்​வார் என்​ப​தற்​கான முடிவு​கள் தெரிய வரும். இதற்​கிடை​யில் மேற்கு வங்​கத்​தின் 2ஆம் கட்ட தேர்​தல் முடிந்​ததையடுத்​து, நேற்று மாலை 6.30 மணிக்கு தேர்​தலுக்​குப் பின்னரான கருத்​துக் கணிப்பு முடிவு​கள் வெளி​யா​யின.இதில் தமிழகத்​தைப் பொறுத்​தவரை பல்​வேறு நிறு​வனங்​களின் கணிப்​பில் பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தொடரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.குறிப்​பாக சாணக்​கியா ஸ்ட்​ராடஜிஸ், என்​டிடி​வி, ரிபப்​ளிக் டிவி கருத்​துக் கணிப்​பின்​படி திமுக தலை​மையி​லான கூட்​டணி பெரும்​பான்மை இடங்​களைப் பெறும் எனவும், டைம்ஸ் நவ், சிஎன்​என் கணிப்​பில் அதி​முக ஆட்​சி​யைப் பிடிக்​கும் எனவும், இந்​தியா டுடே முடிவு​களில் தவெக முன்னிலை வகிக்​கும் என்றும், காமாக்யா கணிப்​பில் தொங்கு சட்​டப்​ பேரவைக்கான வாய்ப்​பு இருப்​ப​தாக​ கூறப்​பட்​டுள்​ளது.புதுச்சேரி நிலவரம்: புதுச்​சேரி யூனியன் பிரதேசத்​தில் 30 தொகு​தி​கள் உள்​ளன. தற்​போது ஆட்​சி​யில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் என்​.ஆர். காங்​கிரஸ் 16, பாஜக 10, அதி​முக 2, லஜக 2 இடங்​களில் போட்​டி​யிட்​டன. இண்​டியா கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் 16, திமுக 13, விடு​தலைச் சிறுத்​தைகள் ஒரு இடம் என போட்​டி​யிட்​டன. ஒரு​மித்த கருத்து இல்​லாத​தால் இண்​டியா கூட்​ட​ணி​யில் இடம்பெற்​றிருந்த இந்​திய கம்​யூனிஸ்ட் ஒரு தொகு​தி​யிலும், மார்க்​சிஸ்ட் 2 தொகு​தி​களி​லும் தனி​யாக போட்​டி​யிட்​டன. திமுக போட்​டி​யிடும் 5 தொகு​தி​கள், விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் ஒரு தொகுதி என 6 இடங்​களில்      காங்​கிரஸ் போட்டி வேட்​பாளர்​கள் கை சின்​னத்​திலேயே களம் இறங்​கினர்.அதே​போல், விஜய்​யின் தவெக புதுச்​சேரி​யில் நேயம் மக்​கள் கழகத்​துடன் கூட்​டணி அமைத்​துள்​ளது. தவெக 28 இடங்​களி​லும், நேயம் மக்​கள் கழகம் 2      இடங்​களி​லும் போட்​டி​யிட்​டன. நாம் தமிழர் கட்சி புதுச்​சேரி, காரைக்​காலில் 28 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. மாஹே, ஏனாமில் போட்​டி​யிடு​வதை இம்​முறை​யும் புறக்​கணித்​தது.புதுச்​சேரியிலும் வாக்கு எண்​ணிக்​கை​ வரும் 4ஆம் திகதி நடை​பெறவுள்​ளது. நேற்று வெளி​யான தேர்​தலுக்​குப் பின்னரான கருத்​துக் கணிப்​பு​கள் அனைத்​தும் என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​யைத் தக்கவைக்​கும் என்று தெரி​வித்​துள்​ளன. எனினும், தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் யார் ஆட்​சியை பிடிப்​பார் என்ற முழு நில​வரம்​ மே 4ஆம் திகதி தெரிய வரும்​.

Advertisement

Advertisement

Advertisement