• Nov 01 2026

வீட்டின் முன்பாகக் காத்திருந்த ஆபத்து - பறிபோன பச்சிளம் உயிர்!

Chithra / Nov 1st 2026, 11:57 am
image


புத்தளம், உடப்பு கொத்தாந்தீவு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வீட்டின் முன்பாக இருந்த சிறிய கிணற்றில் பெண் குழந்தை ஒன்று தவறி வீழ்ந்துள்ளது.


இதையடுத்து, குழந்தை உடனடியாக கொத்தாந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.


ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.


தற்போது உயிரிழந்த குழந்தையின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


பெரியபாடு, கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வருடமும் நான்கு மாதங்களும் வயதுடைய பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


நேற்று (31) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் உடப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


வீட்டின் முன்பாகக் காத்திருந்த ஆபத்து - பறிபோன பச்சிளம் உயிர் புத்தளம், உடப்பு கொத்தாந்தீவு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வீட்டின் முன்பாக இருந்த சிறிய கிணற்றில் பெண் குழந்தை ஒன்று தவறி வீழ்ந்துள்ளது.இதையடுத்து, குழந்தை உடனடியாக கொத்தாந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.தற்போது உயிரிழந்த குழந்தையின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.பெரியபாடு, கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வருடமும் நான்கு மாதங்களும் வயதுடைய பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.நேற்று (31) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் உடப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement