தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தக்க வைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்றது. ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாதக என 4 முனைப் போட்டி நிலவியது.
இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக 164, காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, மார்க்சிஸ்ட் 5, இந்திய கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, ஐயூஎம்எல் 2, கொமதேக 2, மமக 2, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சி தலா ஒரு தொகுதியில் களம் கண்டன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக 166, பாஜக 26, பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ், தென்னிந்திய பார்வர்ட் பிளாக், தமமுக தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன. சசிகலா - ராமதாஸ் கூட்டணியில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (சசிகலா) - 71, அய்யா பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ்) - 38, பசும்பொன் மக்கள் தேசம் - 2, வேளாளர் முன்னேற்றக் கழகம் - 1, இதரக் கட்சிகள் 8 இடங்களில் போட்டியிட்டன.
முதல் முறையாக தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தவெக 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டுள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சி (வேல்முருகன்) 170 தொகுதிகள், புதிய தமிழகம் (கிருஷ்ணசாமி) 70 தொகுதிகள், பகுஜன் சமாஜ் கட்சி 118 இடங்களில் போட்டியிட்டன.
இந்நிலையில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 62 மையங்களில் வரும் மே 4அம் திகதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அன்று
பிற்பகலுக்குள் யார் ஆட்சியில் அமர்வார் என்பதற்கான முடிவுகள் தெரிய வரும். இதற்கிடையில் மேற்கு வங்கத்தின் 2ஆம் கட்ட தேர்தல் முடிந்ததையடுத்து, நேற்று மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாயின.
இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்களின் கணிப்பில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ், என்டிடிவி, ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பின்படி திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறும் எனவும், டைம்ஸ் நவ், சிஎன்என் கணிப்பில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், இந்தியா டுடே முடிவுகளில் தவெக முன்னிலை வகிக்கும் என்றும், காமாக்யா கணிப்பில் தொங்கு சட்டப் பேரவைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி நிலவரம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகள் உள்ளன. தற்போது ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 இடங்களில் போட்டியிட்டன. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடம் என போட்டியிட்டன.
ஒருமித்த கருத்து இல்லாததால் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டன. திமுக போட்டியிடும் 5 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு தொகுதி என 6 இடங்களில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் கை சின்னத்திலேயே களம் இறங்கினர்.
அதேபோல், விஜய்யின் தவெக புதுச்சேரியில் நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. தவெக 28 இடங்களிலும், நேயம் மக்கள் கழகம் 2 இடங்களிலும் போட்டியிட்டன. நாம் தமிழர் கட்சி புதுச்சேரி, காரைக்காலில் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மாஹே, ஏனாமில் போட்டியிடுவதை இம்முறையும் புறக்கணித்தது.
புதுச்சேரியிலும் வாக்கு எண்ணிக்கை வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. நேற்று வெளியான தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் என்டிஏ கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவித்துள்ளன. எனினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் யார் ஆட்சியை பிடிப்பார் என்ற முழு நிலவரம் மே 4ஆம் திகதி தெரிய வரும்.
தமிழகத்தில் ஆட்சியை மீண்டும் திமுக பிடிக்குமா தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தக்க வைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்றது. ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாதக என 4 முனைப் போட்டி நிலவியது. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக 164, காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, மார்க்சிஸ்ட் 5, இந்திய கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, ஐயூஎம்எல் 2, கொமதேக 2, மமக 2, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சி தலா ஒரு தொகுதியில் களம் கண்டன.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக 166, பாஜக 26, பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ், தென்னிந்திய பார்வர்ட் பிளாக், தமமுக தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன. சசிகலா - ராமதாஸ் கூட்டணியில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (சசிகலா) - 71, அய்யா பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ்) - 38, பசும்பொன் மக்கள் தேசம் - 2, வேளாளர் முன்னேற்றக் கழகம் - 1, இதரக் கட்சிகள் 8 இடங்களில் போட்டியிட்டன.முதல் முறையாக தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தவெக 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டுள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சி (வேல்முருகன்) 170 தொகுதிகள், புதிய தமிழகம் (கிருஷ்ணசாமி) 70 தொகுதிகள், பகுஜன் சமாஜ் கட்சி 118 இடங்களில் போட்டியிட்டன.இந்நிலையில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 62 மையங்களில் வரும் மே 4அம் திகதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அன்று பிற்பகலுக்குள் யார் ஆட்சியில் அமர்வார் என்பதற்கான முடிவுகள் தெரிய வரும். இதற்கிடையில் மேற்கு வங்கத்தின் 2ஆம் கட்ட தேர்தல் முடிந்ததையடுத்து, நேற்று மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாயின.இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்களின் கணிப்பில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ், என்டிடிவி, ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பின்படி திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறும் எனவும், டைம்ஸ் நவ், சிஎன்என் கணிப்பில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், இந்தியா டுடே முடிவுகளில் தவெக முன்னிலை வகிக்கும் என்றும், காமாக்யா கணிப்பில் தொங்கு சட்டப் பேரவைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.புதுச்சேரி நிலவரம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகள் உள்ளன. தற்போது ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 இடங்களில் போட்டியிட்டன. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடம் என போட்டியிட்டன. ஒருமித்த கருத்து இல்லாததால் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டன. திமுக போட்டியிடும் 5 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு தொகுதி என 6 இடங்களில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் கை சின்னத்திலேயே களம் இறங்கினர்.அதேபோல், விஜய்யின் தவெக புதுச்சேரியில் நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. தவெக 28 இடங்களிலும், நேயம் மக்கள் கழகம் 2 இடங்களிலும் போட்டியிட்டன. நாம் தமிழர் கட்சி புதுச்சேரி, காரைக்காலில் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மாஹே, ஏனாமில் போட்டியிடுவதை இம்முறையும் புறக்கணித்தது.புதுச்சேரியிலும் வாக்கு எண்ணிக்கை வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. நேற்று வெளியான தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் என்டிஏ கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவித்துள்ளன. எனினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் யார் ஆட்சியை பிடிப்பார் என்ற முழு நிலவரம் மே 4ஆம் திகதி தெரிய வரும்.