• Nov 06 2026

தலைமன்னார் கடற்பரப்பில் இன்று அதிகாலை நடந்தது என்ன? இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Chithra / Nov 1st 2026, 11:02 am
image


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீன்பிடிப் படகொன்றை கைப்பற்றியுள்ள இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 7 இந்திய மீனவர்களையும் இன்று (நவம்பர் 1) கைது செய்துள்ளனர்.


தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பிற்குள் அதிகளவிலான இந்திய மீன்பிடிப் படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்த வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.


இதன்போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட படகையும் தலைமன்னார் இறங்குதுறைக்கு கொண்டு செல்லப்பட்டு, 

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் கடற்பரப்பில் இன்று அதிகாலை நடந்தது என்ன இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீன்பிடிப் படகொன்றை கைப்பற்றியுள்ள இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 7 இந்திய மீனவர்களையும் இன்று (நவம்பர் 1) கைது செய்துள்ளனர்.தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பிற்குள் அதிகளவிலான இந்திய மீன்பிடிப் படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்த வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட படகையும் தலைமன்னார் இறங்குதுறைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement