திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
இதன்போது தென்னை, வாழை உள்ளிட்ட பல மரங்கள் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.
அருகிலுள்ள கிரான் குளத்தில் காணப்படும் காட்டு யானைகள் மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் கிராமத்திற்குள் உட்புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன.
இதனால் இரவு வேளைகளில் வீடுகளில் உறங்குவதற்கும் அச்சம் கொள்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் அரசாங்கமானது கிராமத்திற்குள் உட்புகாத வகையில் யானைப் பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு மூதூர் - கிளிவெட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிளிவெட்டி கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் - உயிர் அச்சத்தில் மக்கள் திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியுள்ளன.இதன்போது தென்னை, வாழை உள்ளிட்ட பல மரங்கள் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.அருகிலுள்ள கிரான் குளத்தில் காணப்படும் காட்டு யானைகள் மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் கிராமத்திற்குள் உட்புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன.இதனால் இரவு வேளைகளில் வீடுகளில் உறங்குவதற்கும் அச்சம் கொள்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதனால் அரசாங்கமானது கிராமத்திற்குள் உட்புகாத வகையில் யானைப் பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு மூதூர் - கிளிவெட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.