• Sep 13 2025

குடியிருப்புக்குள் ஜோடியாக வலம்வந்த காட்டு யானைகள்; பதற்றம் இன்றி செல்லும் சிசிரிவி காட்சி வைரல்

shanuja / Sep 13th 2025, 12:16 pm
image

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ( 12 ) ஜேடியாக வீறுநடை போட்டு வீதிகளில்  நடமாடிய காட்டு யானைகளின் சிசிரிவி காணெளி வெளியாகியுள்ளது. 


அண்மைக்காலங்களில் குடியிருப்புக்கள் வயல்வெளிகளுக்குள் காட்டுயானைகளின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அத்துடன் காட்டு யானையின் தாக்கத்துக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திசைமாறி மட்டு வாவியை கடந்து புதுக்குடியிருப்பு பகுதிக்குள் இந்த இரண்டு காட்டு யானைகளும் ஊடுருவியிருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர். நள்ளிரவில் யானைகள் செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள வீட்டில் இருந்த சிசிரிவி கமெராவில் பதிந்துள்ளது. அந்த காட்சியே  தற்போது வெளியாகியுள்ளது

குடியிருப்புக்குள் ஜோடியாக வலம்வந்த காட்டு யானைகள்; பதற்றம் இன்றி செல்லும் சிசிரிவி காட்சி வைரல் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ( 12 ) ஜேடியாக வீறுநடை போட்டு வீதிகளில்  நடமாடிய காட்டு யானைகளின் சிசிரிவி காணெளி வெளியாகியுள்ளது. அண்மைக்காலங்களில் குடியிருப்புக்கள் வயல்வெளிகளுக்குள் காட்டுயானைகளின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் காட்டு யானையின் தாக்கத்துக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திசைமாறி மட்டு வாவியை கடந்து புதுக்குடியிருப்பு பகுதிக்குள் இந்த இரண்டு காட்டு யானைகளும் ஊடுருவியிருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர். நள்ளிரவில் யானைகள் செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள வீட்டில் இருந்த சிசிரிவி கமெராவில் பதிந்துள்ளது. அந்த காட்சியே  தற்போது வெளியாகியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement