நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8:35 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டு நகரத்திற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-181 இரத்து செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களையும் நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 1979 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு நேற்று (09) இரவு 10.00 மணி முதல் நாட்டின் இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக நேபாள இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாள இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை, தீ வைப்பு மற்றும் சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்க அந்நாட்டு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஆரம்பமான இந்த போராட்டாத்தால் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8:35 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டு நகரத்திற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-181 இரத்து செய்யப்பட்டுள்ளது. நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களையும் நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 1979 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு நேற்று (09) இரவு 10.00 மணி முதல் நாட்டின் இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக நேபாள இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை, தீ வைப்பு மற்றும் சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்க அந்நாட்டு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஆரம்பமான இந்த போராட்டாத்தால் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.