கந்தளாய் – சேருநுவர வீதியில் அமைந்துள்ள மகாவெளி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் (02) பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது.
மகாவெளி ஆற்றை அண்மித்த நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்த நிலையில் யானை சடலமாக காணப்படுகிறது.
குறித்த இடம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளதால், யானை எவ்வாறு பள்ளத்தில் விழுந்தது அல்லது மரணத்திற்கான சரியான காரணம் என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்றுள்ள பகுதி சேருநுவர வனவிலங்கு அதிகாரிகளின் எல்லைக்குட்பட்டதாகும். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மகாவெளி பாலம் அருகே காட்டு யானை உயிரிழப்பு கந்தளாய் – சேருநுவர வீதியில் அமைந்துள்ள மகாவெளி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் (02) பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது.மகாவெளி ஆற்றை அண்மித்த நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்த நிலையில் யானை சடலமாக காணப்படுகிறது.குறித்த இடம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளதால், யானை எவ்வாறு பள்ளத்தில் விழுந்தது அல்லது மரணத்திற்கான சரியான காரணம் என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் இடம்பெற்றுள்ள பகுதி சேருநுவர வனவிலங்கு அதிகாரிகளின் எல்லைக்குட்பட்டதாகும். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.