• May 09 2025

வெளியேறியது வெண்புகை! உலக மக்கள் எதிர்பார்த்திருந்த புதிய பாப்பரசர் தெரிவு

Thansita / May 8th 2025, 10:28 pm
image

கத்தோலிக்க திருச்சபையின் 267 ஆவது புதிய பாப்பரசராக ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த  கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தெரிவுசெய்நப்பட்டுள்ளார் - பதினான்காம் லியோ  என்ற பெயரை தெரிவு செய்துள்ளார்

கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசர் சற்றுமுன்னர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

புதிய பாப்பரசரை  அறிவிப்பதற்கான இறுதி நேர நிகழ்வு  வத்திக்கானில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

வத்திக்கானிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் புதிய பாப்பரசர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்றைய தினம் ஆரம்பமாகியிருந்தது. 

புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டால் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வௌ்ளை புகையும் தெரிவு செய்யப்படவில்லை எனில் கறுப்பு புகையும் வௌியேறும்.

அந்தவகையில், வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து முதல் இரண்டுமுறை கரும்புகை வெளியேறியிருந்தது. மூன்றாவது முறையாக சற்றுமுன்னர் வெண்புகை வெளியேறி புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

 

உலகளாவிய ரீதியில் 133 கத்தோலிக்க கர்தினால்கள் ஒன்று கூடி புதிய பாப்பரசரை தெரிவு செய்துள்ளனர். 

இந்த நிகழ்வை உலக மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதுடன் புதிய பாப்பரசரை வரவேற்க்க காத்திருக்கின்றனர்.

வெளியேறியது வெண்புகை உலக மக்கள் எதிர்பார்த்திருந்த புதிய பாப்பரசர் தெரிவு கத்தோலிக்க திருச்சபையின் 267 ஆவது புதிய பாப்பரசராக ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த  கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தெரிவுசெய்நப்பட்டுள்ளார் - பதினான்காம் லியோ  என்ற பெயரை தெரிவு செய்துள்ளார்கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசர் சற்றுமுன்னர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புதிய பாப்பரசரை  அறிவிப்பதற்கான இறுதி நேர நிகழ்வு  வத்திக்கானில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வத்திக்கானிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் புதிய பாப்பரசர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்றைய தினம் ஆரம்பமாகியிருந்தது. புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டால் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வௌ்ளை புகையும் தெரிவு செய்யப்படவில்லை எனில் கறுப்பு புகையும் வௌியேறும்.அந்தவகையில், வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து முதல் இரண்டுமுறை கரும்புகை வெளியேறியிருந்தது. மூன்றாவது முறையாக சற்றுமுன்னர் வெண்புகை வெளியேறி புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் உலகளாவிய ரீதியில் 133 கத்தோலிக்க கர்தினால்கள் ஒன்று கூடி புதிய பாப்பரசரை தெரிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வை உலக மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதுடன் புதிய பாப்பரசரை வரவேற்க்க காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement