• Jun 17 2026

இந்து ஆலயங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கின்றது! வவுனியாவில் கலந்துரையாடல்!

shanu / Jun 17th 2026, 5:58 pm
image

ஆலயங்கள் மற்றும் தர்ம நம்பிக்கை பொறுப்பு நிறுவனங்களின் நிர்வாகத்தினருடனான கலந்துரையாடல் ஒன்று சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.


குறித்த கலந்துரையாடலில்  இந்து ஆலயங்கள் மற்றும்  சமயநிறுவனங்கள் தொடர்பாக இலங்கையில் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகள், மற்றும் 1917ம் ஆண்டு 9ம் இலக்க நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தில் அரச அதிகாரிகளுக்கு தரும நம்பிக்கைப் பொறுப்புக்கள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரதேச செயலாளருக்கு காணப்படும் அதிகாரங்கள் ,ஆலயங்கள் மற்றும் சமயநிறுவனங்கள் தொடர்பாக இலங்கையில் காணப்படுகின்ற ஏனைய சட்ட ஏற்பாடுகள். போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.


குறித்த நிகழ்வில் வளவாளராக சட்டத்தரணி வி.எஸ்.கணேசராஜன் கலந்துகொண்டிருந்ததுடன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் ப. சத்தியநாதன், மற்றும் ஆலயங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்து ஆலயங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கின்றது வவுனியாவில் கலந்துரையாடல் ஆலயங்கள் மற்றும் தர்ம நம்பிக்கை பொறுப்பு நிறுவனங்களின் நிர்வாகத்தினருடனான கலந்துரையாடல் ஒன்று சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில்  இந்து ஆலயங்கள் மற்றும்  சமயநிறுவனங்கள் தொடர்பாக இலங்கையில் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகள், மற்றும் 1917ம் ஆண்டு 9ம் இலக்க நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தில் அரச அதிகாரிகளுக்கு தரும நம்பிக்கைப் பொறுப்புக்கள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரதேச செயலாளருக்கு காணப்படும் அதிகாரங்கள் ,ஆலயங்கள் மற்றும் சமயநிறுவனங்கள் தொடர்பாக இலங்கையில் காணப்படுகின்ற ஏனைய சட்ட ஏற்பாடுகள். போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.குறித்த நிகழ்வில் வளவாளராக சட்டத்தரணி வி.எஸ்.கணேசராஜன் கலந்துகொண்டிருந்ததுடன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் ப. சத்தியநாதன், மற்றும் ஆலயங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement