• Dec 17 2025

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற மாட்டோம்! வீதிக்கிறங்கிய நோர்வூர்ட் மக்கள்

Chithra / Dec 17th 2025, 1:13 pm
image

  

டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் - ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நோர்வூர்ட் - ஸ்டொக்ஹோம் பகுதியில் மண்சரிவு ஆபத்து இருப்பதாகக் கூறி 50 குடும்பங்களைச் சேர்ந்த 307பேர் அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

 

இந்தநிலையில், மீண்டும் அந்த பகுதியில் குடியேற முடியாது எனத் தெரிவித்து தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதன்போது பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பினையும் வெளியிட்டனர்.

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற மாட்டோம் வீதிக்கிறங்கிய நோர்வூர்ட் மக்கள்   டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் - ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நோர்வூர்ட் - ஸ்டொக்ஹோம் பகுதியில் மண்சரிவு ஆபத்து இருப்பதாகக் கூறி 50 குடும்பங்களைச் சேர்ந்த 307பேர் அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்தநிலையில், மீண்டும் அந்த பகுதியில் குடியேற முடியாது எனத் தெரிவித்து தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பினையும் வெளியிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement