கந்தளாய் பிரதேசத்தில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர நேற்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
கந்தளாய் பிரதேச சபைத் தலைவரின் விசேட வேண்டுகோளுக்கு இணங்கவே, ஆளுநர் இந்த ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின்போது, ஆளுநரின் பிரதான கவனம், அடிக்கடி வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியமான வடிகால் அமைப்புகளை நிர்மாணித்தல் குறித்தும், பழுதடைந்துள்ள வீதிகளைச் உடனடியாகச் சரிசெய்தல் குறித்தும் செலுத்தப்பட்டது.
ஆளுநரின் இந்த முக்கிய விஜயத்தின் போது, கந்தளாய் பிரதேச சபைத் தலைவர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்து கொண்டு, அப்பகுதி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.
கந்தளாய் பிரதேசத்திற்கு ஆளுநர் திடீர் விஜயம்: வெள்ள அபாயப் பகுதிகளில் ஆய்வு கந்தளாய் பிரதேசத்தில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர நேற்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.கந்தளாய் பிரதேச சபைத் தலைவரின் விசேட வேண்டுகோளுக்கு இணங்கவே, ஆளுநர் இந்த ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.இந்த விஜயத்தின்போது, ஆளுநரின் பிரதான கவனம், அடிக்கடி வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியமான வடிகால் அமைப்புகளை நிர்மாணித்தல் குறித்தும், பழுதடைந்துள்ள வீதிகளைச் உடனடியாகச் சரிசெய்தல் குறித்தும் செலுத்தப்பட்டது.ஆளுநரின் இந்த முக்கிய விஜயத்தின் போது, கந்தளாய் பிரதேச சபைத் தலைவர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்து கொண்டு, அப்பகுதி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.