ஜெர்மனி, லக்சம்பேர்க்கில் இருந்து சுமார் 500,000 யூரோக்கள் பெறுமதியான 69,000 கிலோ கிராம் பேரிடர் நிவாரண மனிதாபிமான உதவிகளுடன் சிறப்பு சரக்கு விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க, விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்ட இந்த உதவிப் பொருட்களில், கூடாரங்கள் மற்றும் அவசரகால தங்குமிடங்கள், உணவு தயாரிப்பதற்கான பாத்திரங்கள், மெத்தைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பேரிடர் நிவாரணப் பொருட்கள் அடங்கும்.
மனிதாபிமான உதவியை அதிகாரப்பூர்வமாகப் பெறுவதற்காக இலங்கைக்கான ஜெர்மனியின் துணைத் தூதர் சாரா ஹாசல்பார்த், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் டிரிபன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அதிகாரிகள் விமான நிலையத்தில் உடனிருந்தனர்.
இலங்கையை வந்தடைந்த 500,000 யூரோ பெறுமதியான உதவிப் பொருட்கள் ஜெர்மனி, லக்சம்பேர்க்கில் இருந்து சுமார் 500,000 யூரோக்கள் பெறுமதியான 69,000 கிலோ கிராம் பேரிடர் நிவாரண மனிதாபிமான உதவிகளுடன் சிறப்பு சரக்கு விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க, விமான நிலையத்தில் தரையிறங்கியது.ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்ட இந்த உதவிப் பொருட்களில், கூடாரங்கள் மற்றும் அவசரகால தங்குமிடங்கள், உணவு தயாரிப்பதற்கான பாத்திரங்கள், மெத்தைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பேரிடர் நிவாரணப் பொருட்கள் அடங்கும்.மனிதாபிமான உதவியை அதிகாரப்பூர்வமாகப் பெறுவதற்காக இலங்கைக்கான ஜெர்மனியின் துணைத் தூதர் சாரா ஹாசல்பார்த், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் டிரிபன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அதிகாரிகள் விமான நிலையத்தில் உடனிருந்தனர்.