• Apr 15 2026

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசா சலுகை காலம் நீடிப்பு

Chithra / Mar 1st 2026, 2:50 pm
image

 

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட விசா சலுகை காலத்தை இரண்டு வாரங்களாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விசேட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.


முன்னதாக ஒரு வாரமாக (7 நாட்கள்) அறிவிக்கப்பட்டிருந்த விசா சலுகை காலம், தற்போது இரண்டு வாரங்களாக (14 நாட்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது.


மத்திய கிழக்கு வான்பரப்புகள் மூடப்பட்டமை மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாட்டுப் பயணிகள் அவர்களது நாடுகளுக்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எவ்வித அபராதமுமின்றி மேலதிகமாக 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசா சலுகை காலம் நீடிப்பு  மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட விசா சலுகை காலத்தை இரண்டு வாரங்களாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விசேட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.முன்னதாக ஒரு வாரமாக (7 நாட்கள்) அறிவிக்கப்பட்டிருந்த விசா சலுகை காலம், தற்போது இரண்டு வாரங்களாக (14 நாட்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு வான்பரப்புகள் மூடப்பட்டமை மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாட்டுப் பயணிகள் அவர்களது நாடுகளுக்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எவ்வித அபராதமுமின்றி மேலதிகமாக 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement