முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு விநாயகபுரம் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லதம்பி திலகனாதனுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் இன்மை , வயற்காணி பிரச்சனைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனிகள் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டது
குறிப்பாக வவுனிக்குளத்தின் கீழான 36ம் வாய்க்காலின் கேலான வயல்களுக்கு நீரை பாய்ச்சுவதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றது
இந்த வாய்க்காலனது அண்மையில் அரச நிதியில் புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும் இப்பிரச்சனி உள்ளதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது.
இப் பிரச்சனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் அவ்விடத்திலேயே தொலைபேசி மூலமாக மாகாண நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது மாவட்ட பிரதி நீர்பாசன தினைக்கள் பணிப்பாளரிடம் பிரச்சினை தொடர்பில் தெரிவிப்பதாக கூறினார்.
பின்னர் மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு இந்த வருடத்தின் கால போக நெற்செய்கை மேற்கொள்ளப்படும் போது குறித்த வாய்க்கால் ஊடாக நீர் வழங்கப்பட்டு விவசாயிகளுக்கான முழுமையான தீர்வு வழங்கப்படுமென உறுதியளித்தார்.
இதே வேளை விநாயகபுரம் கிராம இளைஞர்களால் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்ட போது அது தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒருங்கிணைப்பு தலைவர் தொடர்பு கொண்ட போது விளையாட்டு மைதானத்திற்குரிய காணியை பொருத்தமான இடத்தில் வழங்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார், இதேவேளை வழங்கப்படும் மைதானத்துக்கான அபிவிருத்தி பணிகளையும் , பூவரசங்குளம் பொன்னகர் கிராமங்களுக்கான விளையாட்டு உபகரண திட்டங்களையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
திலகனாதன் எம்.பியுடன் விநாயகர்புரம் விவசாயிகள், இளைஞர்கள் சந்திப்பு முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு விநாயகபுரம் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லதம்பி திலகனாதனுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் இன்மை , வயற்காணி பிரச்சனைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனிகள் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டதுகுறிப்பாக வவுனிக்குளத்தின் கீழான 36ம் வாய்க்காலின் கேலான வயல்களுக்கு நீரை பாய்ச்சுவதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றது இந்த வாய்க்காலனது அண்மையில் அரச நிதியில் புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும் இப்பிரச்சனி உள்ளதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது. இப் பிரச்சனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் அவ்விடத்திலேயே தொலைபேசி மூலமாக மாகாண நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது மாவட்ட பிரதி நீர்பாசன தினைக்கள் பணிப்பாளரிடம் பிரச்சினை தொடர்பில் தெரிவிப்பதாக கூறினார். பின்னர் மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு இந்த வருடத்தின் கால போக நெற்செய்கை மேற்கொள்ளப்படும் போது குறித்த வாய்க்கால் ஊடாக நீர் வழங்கப்பட்டு விவசாயிகளுக்கான முழுமையான தீர்வு வழங்கப்படுமென உறுதியளித்தார். இதே வேளை விநாயகபுரம் கிராம இளைஞர்களால் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்ட போது அது தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒருங்கிணைப்பு தலைவர் தொடர்பு கொண்ட போது விளையாட்டு மைதானத்திற்குரிய காணியை பொருத்தமான இடத்தில் வழங்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார், இதேவேளை வழங்கப்படும் மைதானத்துக்கான அபிவிருத்தி பணிகளையும் , பூவரசங்குளம் பொன்னகர் கிராமங்களுக்கான விளையாட்டு உபகரண திட்டங்களையும் வழங்குவதாக உறுதியளித்தார்.