• May 09 2026

தொலைபேசி அழைப்பால் வந்த வினை...! மனைவி மீது பாய்ந்த கணவன் கைது...!samugammedia

Ziya / Dec 11th 2023, 3:00 pm
image

மரக்கறி வெட்டும் கத்தியால் மனைவி மீது தாக்குல் மேற்கொண்ட கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜனஉதானகம வீடமைப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் சமையல் கடமையில் மனைவி ஈடுபட்டிருந்தபோது அவரது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது.

குறித்த அழைப்பு தொடர்பில் மனைவியிடம் கணவன் கேள்வியெழுப்பிய  நிலையில் அது தொடர்பில் மனைவி முன்னுக்குப் பின் முரணான தகவல்​களை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவன், வீட்டிலிருந்த மரக்கறி வெட்டும் கத்தியால் மனைவியின் முகம், நெஞ்சு மற்றும் கைகளை வெட்டியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மனைவி, மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதேவேளை கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கணவனை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





தொலைபேசி அழைப்பால் வந்த வினை. மனைவி மீது பாய்ந்த கணவன் கைது.samugammedia மரக்கறி வெட்டும் கத்தியால் மனைவி மீது தாக்குல் மேற்கொண்ட கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜனஉதானகம வீடமைப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் சமையல் கடமையில் மனைவி ஈடுபட்டிருந்தபோது அவரது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது.குறித்த அழைப்பு தொடர்பில் மனைவியிடம் கணவன் கேள்வியெழுப்பிய  நிலையில் அது தொடர்பில் மனைவி முன்னுக்குப் பின் முரணான தகவல்​களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவன், வீட்டிலிருந்த மரக்கறி வெட்டும் கத்தியால் மனைவியின் முகம், நெஞ்சு மற்றும் கைகளை வெட்டியுள்ளார்.குறித்த சம்பவத்தில் காயமடைந்த மனைவி, மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட கணவனை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement