• Jul 06 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக VAT Refund முன்னரங்கம்

Chithra / Jul 5th 2025, 3:45 pm
image


உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறமதி சேர் வரியை மீண்டும் பெற்றுக் கொடுக்கும் முன்னரங்கமொன்று  அமைக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான அணில் ஜெயந்த தலைமையில் நேற்று இந்நிகழ்வு நடைபெற்றது.

இலங்கையில் 90 நாட்களுக்கு குறைவாக தங்கி இருக்கும் போது 50000 ரூபாவை விட அதிகமான தொகை VAT வரியாக செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு செலுத்திய VAT வரியை இங்கு மீளப் பெற்றுக் கொள்ளலாம்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் உற்பத்திகளை கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி சேகரிப்பு முறையை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக VAT Refund முன்னரங்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறமதி சேர் வரியை மீண்டும் பெற்றுக் கொடுக்கும் முன்னரங்கமொன்று  அமைக்கப்பட்டுள்ளது.கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான அணில் ஜெயந்த தலைமையில் நேற்று இந்நிகழ்வு நடைபெற்றது.இலங்கையில் 90 நாட்களுக்கு குறைவாக தங்கி இருக்கும் போது 50000 ரூபாவை விட அதிகமான தொகை VAT வரியாக செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு செலுத்திய VAT வரியை இங்கு மீளப் பெற்றுக் கொள்ளலாம்.சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் உற்பத்திகளை கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி சேகரிப்பு முறையை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement