• Jun 14 2026

கொழுந்து மடுவத்தில் குவியும் கடிதங்கள்: 20 ஆண்டுகளாக தபால் சேவையின்றி தவிக்கும் தோட்ட மக்கள்

Chithra / Jun 14th 2026, 12:11 pm
image


நுவரெலியா மாவட்டத்தின் உடப்புஸ்சல்லாவ – வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட டலோஸ் தோட்ட மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான தபால் சேவை கிடைக்காததால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


உடப்புஸ்சல்லாவ தபால் நிலையத்திலிருந்து டலோஸ் மற்றும் எனிக் தோட்டங்களுக்கு வரும் கடிதங்கள் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படாமல், தோட்ட நிர்வாக அலுவலகங்கள் ஊடாக அனுப்பப்படுகின்றன. பின்னர் அவை தோட்டத்தில் உள்ள கொழுந்து நிறுக்கும் மடுவப் பகுதியில் பெட்டிகளில் குவித்து வைக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


சாதாரண கடிதங்கள் மட்டுமன்றி, பதிவு தபால்கள், வங்கி அறிவிப்புகள், பாடசாலை தொடர்பான தகவல்கள் மற்றும் அவசர அறிவிப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் இதே முறையில் கைவிடப்படுவதால், அவை உரிய நேரத்தில் மக்களின் கைகளுக்கு சென்றடைவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பாக எழுத்தறிவு கொண்டவர்கள் அல்லது அவ்வப்போது அந்த இடத்திற்குச் செல்வோர் மட்டுமே தமக்கான கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியும் நிலை காணப்படுவதாகவும், வெளியூரில் வசிப்பவர்கள் அல்லது வேலை காரணமாக அங்கு அடிக்கடி வர முடியாதவர்கள் தங்களுக்கான கடிதங்களை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


இதனால் பல முக்கிய ஆவணங்கள் காலாவதியாகி குப்பையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது மக்களின் அடிப்படை சேவைகள் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படும் சூழலை உருவாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.


இந்த பிரச்சினை தொடர்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி கல்வி அமைச்சருமான ஒருவரிடம் மக்கள் கவனத்திற்கு கொண்டுசென்றபோது, பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து எழுத்துமூல கோரிக்கை கிடைத்தால் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


நவீன தொழில்நுட்ப காலத்திலும் ஒரு அடிப்படை அரச சேவையான தபால் சேவை முறையாக கிடைக்காதது கவலைக்குரிய விடயமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொழுந்து மடுவத்தில் குவியும் கடிதங்கள்: 20 ஆண்டுகளாக தபால் சேவையின்றி தவிக்கும் தோட்ட மக்கள் நுவரெலியா மாவட்டத்தின் உடப்புஸ்சல்லாவ – வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட டலோஸ் தோட்ட மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான தபால் சேவை கிடைக்காததால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.உடப்புஸ்சல்லாவ தபால் நிலையத்திலிருந்து டலோஸ் மற்றும் எனிக் தோட்டங்களுக்கு வரும் கடிதங்கள் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படாமல், தோட்ட நிர்வாக அலுவலகங்கள் ஊடாக அனுப்பப்படுகின்றன. பின்னர் அவை தோட்டத்தில் உள்ள கொழுந்து நிறுக்கும் மடுவப் பகுதியில் பெட்டிகளில் குவித்து வைக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.சாதாரண கடிதங்கள் மட்டுமன்றி, பதிவு தபால்கள், வங்கி அறிவிப்புகள், பாடசாலை தொடர்பான தகவல்கள் மற்றும் அவசர அறிவிப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் இதே முறையில் கைவிடப்படுவதால், அவை உரிய நேரத்தில் மக்களின் கைகளுக்கு சென்றடைவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக எழுத்தறிவு கொண்டவர்கள் அல்லது அவ்வப்போது அந்த இடத்திற்குச் செல்வோர் மட்டுமே தமக்கான கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியும் நிலை காணப்படுவதாகவும், வெளியூரில் வசிப்பவர்கள் அல்லது வேலை காரணமாக அங்கு அடிக்கடி வர முடியாதவர்கள் தங்களுக்கான கடிதங்களை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.இதனால் பல முக்கிய ஆவணங்கள் காலாவதியாகி குப்பையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது மக்களின் அடிப்படை சேவைகள் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படும் சூழலை உருவாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.இந்த பிரச்சினை தொடர்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி கல்வி அமைச்சருமான ஒருவரிடம் மக்கள் கவனத்திற்கு கொண்டுசென்றபோது, பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து எழுத்துமூல கோரிக்கை கிடைத்தால் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.நவீன தொழில்நுட்ப காலத்திலும் ஒரு அடிப்படை அரச சேவையான தபால் சேவை முறையாக கிடைக்காதது கவலைக்குரிய விடயமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement