• May 23 2026

அமெரிக்கா - சிக்காகோவில் துப்பாக்கிச்சூடு; 7பேர் பலி - 40க்கும் மேற்பட்டோர் காயம்!

shanu / Sep 3rd 2025, 2:41 pm
image

சிக்காகோவில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சிக்காக்கோவில் இடம்பெற்ற அமெரிக்க தொழிலாளர் தின கொண்டாட்டத்தின்போது,இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 


இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிக்காகோ நகரின் பல்வேறு பகுதிகளில், 72 மணி நேரத்தில் 32 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - சிக்காகோவில் துப்பாக்கிச்சூடு; 7பேர் பலி - 40க்கும் மேற்பட்டோர் காயம் சிக்காகோவில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சிக்காக்கோவில் இடம்பெற்ற அமெரிக்க தொழிலாளர் தின கொண்டாட்டத்தின்போது,இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிக்காகோ நகரின் பல்வேறு பகுதிகளில், 72 மணி நேரத்தில் 32 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement