• Nov 27 2026

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Ziya / Nov 27th 2026, 5:07 pm
image

அம்பாறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் உயிர்காப்பு, அவசரகால மீட்புச் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் இன்று (27) வெள்ளிக்கிழமை நடைபெற்றன.


இதன் முதற்கட்டமாக, Voice of Peace Sri Lanka அமைப்பின் தலைவரும், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளருமான எம்.ஏ.சி.எம். றியாஸ் மற்றும் அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் தலைவர் எஸ்.ஐ.எம். பிரோஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தில் இடம்பெற்றது.


இதன்போது, மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், உயிர்காப்புக் குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களிடையே அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


இதன் ஒரு கட்டமாக, உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரின் பங்களிப்புடன் கடற்கரைப் பகுதியில் பொதுமக்களுக்கான அனர்த்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியொன்றை விரைவில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இச்சந்திப்பில் Social TV Media Network இன் ஸ்தாபகப் பணிப்பாளர் எம். சிராஜும் கலந்துகொண்டார்.


இதேவேளை, அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் தலைவர் எஸ்.ஐ.எம். பிரோஸ் மற்றும் அம்பாறை பிரதேச உயிர்காத்தல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினருக்கு இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் அம்பாறை பொலிஸ் நீச்சல் மற்றும் உயிர்காப்புப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில், மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினருக்கு படகு செலுத்துதல், நீச்சல், நீர்நிலை மீட்புப் பணிகள் மற்றும் முதலுதவி உள்ளிட்ட அத்தியாவசியப் பயிற்சிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


அம்பாறை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவத் தயார்நிலையை மேம்படுத்துவதுடன், அவசரகாலச் சூழ்நிலைகளில் திறம்படச் செயற்படக்கூடிய பயிற்றப்பட்ட உயிர்காப்பு மற்றும் மீட்புக் குழுவினரை உருவாக்கும் நோக்கில் இக்கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் அம்பாறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் உயிர்காப்பு, அவசரகால மீட்புச் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் இன்று (27) வெள்ளிக்கிழமை நடைபெற்றன.இதன் முதற்கட்டமாக, Voice of Peace Sri Lanka அமைப்பின் தலைவரும், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளருமான எம்.ஏ.சி.எம். றியாஸ் மற்றும் அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் தலைவர் எஸ்.ஐ.எம். பிரோஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போது, மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், உயிர்காப்புக் குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களிடையே அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.இதன் ஒரு கட்டமாக, உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரின் பங்களிப்புடன் கடற்கரைப் பகுதியில் பொதுமக்களுக்கான அனர்த்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியொன்றை விரைவில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இச்சந்திப்பில் Social TV Media Network இன் ஸ்தாபகப் பணிப்பாளர் எம். சிராஜும் கலந்துகொண்டார்.இதேவேளை, அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் தலைவர் எஸ்.ஐ.எம். பிரோஸ் மற்றும் அம்பாறை பிரதேச உயிர்காத்தல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினருக்கு இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் அம்பாறை பொலிஸ் நீச்சல் மற்றும் உயிர்காப்புப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினருக்கு படகு செலுத்துதல், நீச்சல், நீர்நிலை மீட்புப் பணிகள் மற்றும் முதலுதவி உள்ளிட்ட அத்தியாவசியப் பயிற்சிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அம்பாறை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவத் தயார்நிலையை மேம்படுத்துவதுடன், அவசரகாலச் சூழ்நிலைகளில் திறம்படச் செயற்படக்கூடிய பயிற்றப்பட்ட உயிர்காப்பு மற்றும் மீட்புக் குழுவினரை உருவாக்கும் நோக்கில் இக்கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement