• Jan 14 2025

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை - மேலதிக நேரச் சேவையில் ஈடுபடும் பணியாளர்கள்

Chithra / Dec 9th 2024, 8:26 am
image

 

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன்படி, அந்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் அவசர தேவைப்பாடுகளுக்காகக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் நன்மையடையவுள்ளனர். 

இணையவழி மூலம் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான தினத்தை ஒதுக்கிக் கொள்வதற்காக நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை - மேலதிக நேரச் சேவையில் ஈடுபடும் பணியாளர்கள்  கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, அந்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவசர தேவைப்பாடுகளுக்காகக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் நன்மையடையவுள்ளனர். இணையவழி மூலம் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான தினத்தை ஒதுக்கிக் கொள்வதற்காக நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement