வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையத்துக்கு அருகாமையில் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் அகழப்பட்ட குழ ஒன்று மூடப்படாமல் காணப்படுகின்றது.
குறித்த இடம் மூன்று வீதிகள் சந்திக்கும் முச்சந்தி ஆகும். அத்துடன் இந்த இடத்திலிருந்து 300M தூரத்தில் 30க்கு மேற்பட்ட பிள்ளைகள் படிக்கும் உடுத்துறை புனித மரியாள் முன்பள்ளி, உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை, மற்றும் உடுத்துறை மகாவித்தியாலயம் போன்றன அமைந்துள்ளது.
பாடசாலைக்கு செல்லும் போதும் பாடசாலை முடிந்து வீடுவரும் போதும் சிறுவர்கள் குறித்த இடத்தில் இருந்து விளையாடி செல்வதால் உயிராபத்து ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
ஆகவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறித்த குழியை உடன் மூடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதே போன்று 2013 ஆம் ஆண்டில் உடுத்துறை 10ஆம் வட்டாரத்தில் இலங்கை மின்சாரத்தின் மின்கம்பம் நடுவதற்கு வெட்டிய குழியில் ஒரு முன்பள்ளி குழந்தை விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
உடுத்துறை வேம்படியில் மூடப்படாமல் உள்ள குழி; சிறுவர்கள், மாணவர்களுக்கு உயிராபத்து - ஏற்படும் அபாயம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையத்துக்கு அருகாமையில் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் அகழப்பட்ட குழ ஒன்று மூடப்படாமல் காணப்படுகின்றது.குறித்த இடம் மூன்று வீதிகள் சந்திக்கும் முச்சந்தி ஆகும். அத்துடன் இந்த இடத்திலிருந்து 300M தூரத்தில் 30க்கு மேற்பட்ட பிள்ளைகள் படிக்கும் உடுத்துறை புனித மரியாள் முன்பள்ளி, உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை, மற்றும் உடுத்துறை மகாவித்தியாலயம் போன்றன அமைந்துள்ளது.பாடசாலைக்கு செல்லும் போதும் பாடசாலை முடிந்து வீடுவரும் போதும் சிறுவர்கள் குறித்த இடத்தில் இருந்து விளையாடி செல்வதால் உயிராபத்து ஏற்படும் நிலை காணப்படுகின்றது.ஆகவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறித்த குழியை உடன் மூடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதே போன்று 2013 ஆம் ஆண்டில் உடுத்துறை 10ஆம் வட்டாரத்தில் இலங்கை மின்சாரத்தின் மின்கம்பம் நடுவதற்கு வெட்டிய குழியில் ஒரு முன்பள்ளி குழந்தை விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.