• Aug 17 2025

தொலைகாட்சி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு - யாழில் சிக்கிய இரு இளைஞர்கள்

Chithra / Aug 17th 2025, 12:56 pm
image

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானை மடத்தடியில் உள்ள வீட்டில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத வேளை தொலைகாட்சி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவே வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர்,

நேற்று இரவு குடத்தனை பொற்பதி பகுதியில் உள்ள வீட்டில், திருடப்பட்ட பொருட்களுடன் அதே பகுதியை சேர்ந்த 24, 28 வயதான இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொலைகாட்சி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு - யாழில் சிக்கிய இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானை மடத்தடியில் உள்ள வீட்டில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத வேளை தொலைகாட்சி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவே வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.இதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர்,நேற்று இரவு குடத்தனை பொற்பதி பகுதியில் உள்ள வீட்டில், திருடப்பட்ட பொருட்களுடன் அதே பகுதியை சேர்ந்த 24, 28 வயதான இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement