ஈரான் மீதான போர் 24-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப்,
ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பொறுத்து, ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் முழுவதும் ஈரானுடன் இராஜதந்திர ரீதியிலான விவாதங்கள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் ஈரானின் மிகக் கடுமையான எச்சரிக்கை இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஈரானின் மின் விநியோகக் கட்டமைப்பை அமெரிக்கா தாக்கினால், பதிலுக்கு இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கான மின்சார நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால் இன்று மாலைக்குள் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் விடுத்திருந்த 48 மணிநேரக் கெடு முடிவடைய இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை "பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் போர்நிறுத்தத்தில் (Ceasefire) எனக்கு விருப்பமில்லை" என்று கூறிவந்த டிரம்ப், தற்போது 5 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலைத் திடீரென ஒத்திவைத்த டிரம்ப்: 5 நாட்கள் அவகாசம் ஈரான் மீதான போர் 24-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.தனது சமூக ஊடகப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப்,ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் வெற்றியைப் பொறுத்து, ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான இராணுவத் தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இந்த வாரம் முழுவதும் ஈரானுடன் இராஜதந்திர ரீதியிலான விவாதங்கள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.டிரம்பின் இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் ஈரானின் மிகக் கடுமையான எச்சரிக்கை இருப்பதாகக் கருதப்படுகிறது.ஈரானின் மின் விநியோகக் கட்டமைப்பை அமெரிக்கா தாக்கினால், பதிலுக்கு இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கான மின்சார நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால் இன்று மாலைக்குள் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் விடுத்திருந்த 48 மணிநேரக் கெடு முடிவடைய இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை வரை "பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் போர்நிறுத்தத்தில் (Ceasefire) எனக்கு விருப்பமில்லை" என்று கூறிவந்த டிரம்ப், தற்போது 5 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.