• Jun 10 2025

விமானத்தில் ஏறும்போது தடுமாறிய டிரம்ப் - ஒரு வீடியோவால் ஜனாதிபதி பதவிக்கு வந்த சிக்கல்!

Thansita / Jun 9th 2025, 6:06 pm
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று நியூஜெர்சி மாகாணம் மோரிஸ்டவுண் விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார்.

விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறினார்.

படிக்கட்டில் கீழே விழுவதுபோல் கால் தடுமாறிய டிரம்ப் உடனடியாக சுதாரித்துக்கொண்டார். பின்னர், அவர் பட்டிக்கட்டில் ஏறி விமானத்திற்குள் நுழைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து டொனால்ட் டிரம்பால் படிக்கட்டுகளில் கூட ஏற முடியாது, அவர் ஜனாதிபதியாக இருக்க தகுதியற்றவர் எனவும் சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற்னர்.

இதேபோன்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் விமானத்தில் ஏறும்போது அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்கள் அரங்கேறி சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்த விடீயோக்களும் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


விமானத்தில் ஏறும்போது தடுமாறிய டிரம்ப் - ஒரு வீடியோவால் ஜனாதிபதி பதவிக்கு வந்த சிக்கல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று நியூஜெர்சி மாகாணம் மோரிஸ்டவுண் விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார்.விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறினார். படிக்கட்டில் கீழே விழுவதுபோல் கால் தடுமாறிய டிரம்ப் உடனடியாக சுதாரித்துக்கொண்டார். பின்னர், அவர் பட்டிக்கட்டில் ஏறி விமானத்திற்குள் நுழைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.இதையடுத்து டொனால்ட் டிரம்பால் படிக்கட்டுகளில் கூட ஏற முடியாது, அவர் ஜனாதிபதியாக இருக்க தகுதியற்றவர் எனவும் சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற்னர்.இதேபோன்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் விமானத்தில் ஏறும்போது அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்கள் அரங்கேறி சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்த விடீயோக்களும் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement