திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர இன்று (09) குறித்த நியமனக் கடிதத்தை சிவராஜாவுக்கு திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
திருகோணமலை மாநகர சபை முன்னர் ஒரு நகராட்சி மன்றமாக இருந்தது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டது.
இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த சிவராஜா தற்போது கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் மாகாண விளையாட்டு துறை திணைக்கள பணிப்பாளர்,ஆளுனர் செயலக உதவி செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
திருகோணமலை மாநகரசபை பதில் மாநகர ஆணையாளர் நியமனம் திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர இன்று (09) குறித்த நியமனக் கடிதத்தை சிவராஜாவுக்கு திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். திருகோணமலை மாநகர சபை முன்னர் ஒரு நகராட்சி மன்றமாக இருந்தது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டது. இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த சிவராஜா தற்போது கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மாகாண விளையாட்டு துறை திணைக்கள பணிப்பாளர்,ஆளுனர் செயலக உதவி செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.