• Mar 10 2026

பிரதேச சபையின் அசமந்த போக்கால் போக்குவரத்துக்கு இடையூறு - ஊர்காவற்றுறை மக்கள் விசனம்!

Chithra / Mar 10th 2026, 12:18 pm
image

  


பிரதேச சபையின் அசமந்த போக்கால் ஊர்காவற்றுறை நகர் பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் தரித்து நிற்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் சிறு வாகனங்களால், போக்குவரத்துக்கு மாத்திரமன்றி விபத்துக்கள் ஏற்படும் ஏதுநிலை காணப்படுவதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பிரதேச மக்களுடன் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,

ஊர்காவற்றுறை நகரின் யாழ். பிரதான வீதியில் குறிப்பாக சந்தியிலிருந்து பொதுச் சந்தை வரையான இரு மருங்கிலும் மக்கள் நடமாட்டத்துக்கு இடையூறாக முச்சக்கர வண்டிகளுடன் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், மற்றும் கட்டடப் பொருட்களை ஏற்றும் வாடகை வாகனங்கள் என பல நாளாந்தம் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

குறிப்பாக முச்சக்கர வண்டிகளின் தரிப்பிடம் என பொதுவான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள போதும்  ஊர்காவற்றுறை பிரதேச சபை இதற்கான ஒரு பொதுவான பொறிமுறையை உருவாக்காது அசமந்தமாக இருக்கின்றது.

இதனால் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள், வியாபார நிலையங்களுக்கு நுகர்வுக்காக செல்வோர் உள்ளிட்ட பலர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையும் காணப்படுகின்றது.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் அருகில் இருக்கும் நிலையில் அவர்களும் இவ்விடயத்தில் அசமந்தமாக இருப்பதாகவும் குற்றம்சுமத்தும் மக்கள் இவ்விடயம் தொடர்பில் துறைசார் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


பிரதேச சபையின் அசமந்த போக்கால் போக்குவரத்துக்கு இடையூறு - ஊர்காவற்றுறை மக்கள் விசனம்   பிரதேச சபையின் அசமந்த போக்கால் ஊர்காவற்றுறை நகர் பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் தரித்து நிற்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் சிறு வாகனங்களால், போக்குவரத்துக்கு மாத்திரமன்றி விபத்துக்கள் ஏற்படும் ஏதுநிலை காணப்படுவதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பிரதேச மக்களுடன் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,ஊர்காவற்றுறை நகரின் யாழ். பிரதான வீதியில் குறிப்பாக சந்தியிலிருந்து பொதுச் சந்தை வரையான இரு மருங்கிலும் மக்கள் நடமாட்டத்துக்கு இடையூறாக முச்சக்கர வண்டிகளுடன் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், மற்றும் கட்டடப் பொருட்களை ஏற்றும் வாடகை வாகனங்கள் என பல நாளாந்தம் நிறுத்தி வைக்கப்படுகின்றன.குறிப்பாக முச்சக்கர வண்டிகளின் தரிப்பிடம் என பொதுவான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள போதும்  ஊர்காவற்றுறை பிரதேச சபை இதற்கான ஒரு பொதுவான பொறிமுறையை உருவாக்காது அசமந்தமாக இருக்கின்றது.இதனால் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள், வியாபார நிலையங்களுக்கு நுகர்வுக்காக செல்வோர் உள்ளிட்ட பலர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.அத்துடன் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையும் காணப்படுகின்றது.ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் அருகில் இருக்கும் நிலையில் அவர்களும் இவ்விடயத்தில் அசமந்தமாக இருப்பதாகவும் குற்றம்சுமத்தும் மக்கள் இவ்விடயம் தொடர்பில் துறைசார் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement