• Jun 12 2026

பல மாகாணங்களில் பலத்த காற்று; மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை

Chithra / Jun 12th 2026, 9:54 pm
image

நாட்டில் எதிர்வரும் மணித்தியாலயங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


நாளை (13) பிற்பகல் 06.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 


மத்திய, சப்ரகமுவ, வட, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நாட்டைச் சூழவுள்ள பிராந்தியங்களில் நிலவும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, குறிப்பிட்ட பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மாகாணங்களில் பலத்த காற்று; மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை நாட்டில் எதிர்வரும் மணித்தியாலயங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை (13) பிற்பகல் 06.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வட, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள பிராந்தியங்களில் நிலவும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, குறிப்பிட்ட பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement