• May 25 2025

கொழும்பில் இன்று 12 மணி நேரம் நீர் வெட்டு

Chithra / May 25th 2025, 8:30 am
image


கொழும்பு நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு இன்று 12.00 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, இன்று காலை ​8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

கொழும்பு 1 முதல் 15 வரையிலான பகுதிகளிலும், கோட்டே, கடுவலை, பத்தரமுல்லை, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியா, IDH, மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று 12 மணி நேரம் நீர் வெட்டு கொழும்பு நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு இன்று 12.00 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய மேம்பாட்டு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை ​8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.கொழும்பு 1 முதல் 15 வரையிலான பகுதிகளிலும், கோட்டே, கடுவலை, பத்தரமுல்லை, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியா, IDH, மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement