விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் காருடன் மோதியதில் முச்சக்கரவண்டிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தையடுத்து காரின் சாரதியான பெண் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
காருடன் மோதிய முச்சக்கரவண்டி; காயமடைந்த பலர் வைத்தியசாலையில் முச்சக்கர வண்டி எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூலிகம பகுதியில், இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டையிழந்து எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் காருடன் மோதியதில் முச்சக்கரவண்டிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தையடுத்து காரின் சாரதியான பெண் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.