"மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை" என்று பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
ஈரானிய மாலுமிகள் மீதான தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள பாதுகாப்புச் சந்தேகங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"இலங்கை எப்போதும் ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே செயற்படுகின்றது. தற்போதைய சூழலில் நாம் மனிதாபிமானத்துக்கே முதலிடம் வழங்கி வருகின்றோம். தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அரசு மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதால், பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் ஜனாஸாக்களை (உடல்களை) விரைவில் ஈரானுக்கு அனுப்பி வைப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மனிதாபிமான அடிப்படையில் இந்தச் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு விவகாரங்களில் இலங்கை நடுநிலையைப் பேணுவதோடு, தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது." - என்றார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தெரிவிப்பு "மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை" என்று பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.ஈரானிய மாலுமிகள் மீதான தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள பாதுகாப்புச் சந்தேகங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-"இலங்கை எப்போதும் ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே செயற்படுகின்றது. தற்போதைய சூழலில் நாம் மனிதாபிமானத்துக்கே முதலிடம் வழங்கி வருகின்றோம். தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அரசு மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதால், பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் ஜனாஸாக்களை (உடல்களை) விரைவில் ஈரானுக்கு அனுப்பி வைப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மனிதாபிமான அடிப்படையில் இந்தச் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.மத்திய கிழக்கு விவகாரங்களில் இலங்கை நடுநிலையைப் பேணுவதோடு, தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது." - என்றார்.