பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் காண்பதில் அரசியல் தலையீடு ஏதும் இருக்காது என உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் சுயாதீனமாகவும், நிர்வாகக் கட்டமைப்புக்கு உட்பட்டும் செயல்படுவதால், அரசின் உதவித் திட்டங்கள் உரியவர்களைச் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது என வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச செயலகத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் குறித்த மீளாய்வுக்கூட்டம் நேற்று (டிசம்பர் 8) மாலைநடைபெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தலைமை நடைபெற்ற, இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது வரை, கிண்ணியாவில் 5,353 குடும்பங்கள் வெள்ளத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும், இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகவும், அவர்களை உரியவாறு பரிசீலனை செய்து உள்வாங்கிக் கொள்ளுமாறும் கிராம சேவையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிக்காக ரூபா 25,000 வழங்கும் நடவடிக்கை இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது வரை மாவட்டத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கான மதிப்பீடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம், வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம், பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட சேதம், பாடசாலைகளுக்கு ஏற்பட்ட சேதம் ஆகிய தொடர்பாக மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்படுவது, அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் உரியவரைச் சென்றடைவதற்கு வழிவகுப்பதாக மகிழ்ச்சி வெளிப்படுத்தப்படுகின்றது.
ஒரு கிராம உத்தியோகத்தர், தான் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், எந்த ஒரு அரசியல் தலையீடும் தனக்கு ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருப்பது, கடந்த கால அனுபவங்களை விட தற்போதுள்ள நிலையில் காணப்பட்ட முன்னேற்றம் என்றும் பிரதி அமைச்சர் சுட்டி காட்டினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரச உத்தியோகத்தர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர் என்ற வகையிலேயே அவர்கள் நோக்கப்பட வேண்டும். அவர் ஒரு அரச உத்தியோகத்தரா இல்லையா என்பது பிரச்சனையல்ல என கிராம உத்தியோகத்தர்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
நிர்வாகக் கட்டமைப்புக்கு உட்பட்டதாக, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியது கிராம முக்கியத்துவங்களின் கடமை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
வெள்ள நிவாரணப் பணிகளில் அரசியல் தலையீடு இல்லை - கிண்ணியாவில் பிரதி அமைச்சர் தெரிவிப்பு பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் காண்பதில் அரசியல் தலையீடு ஏதும் இருக்காது என உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் சுயாதீனமாகவும், நிர்வாகக் கட்டமைப்புக்கு உட்பட்டும் செயல்படுவதால், அரசின் உதவித் திட்டங்கள் உரியவர்களைச் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது என வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.கிண்ணியா பிரதேச செயலகத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் குறித்த மீளாய்வுக்கூட்டம் நேற்று (டிசம்பர் 8) மாலைநடைபெற்றது.கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தலைமை நடைபெற்ற, இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், தற்போது வரை, கிண்ணியாவில் 5,353 குடும்பங்கள் வெள்ளத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும், இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகவும், அவர்களை உரியவாறு பரிசீலனை செய்து உள்வாங்கிக் கொள்ளுமாறும் கிராம சேவையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிக்காக ரூபா 25,000 வழங்கும் நடவடிக்கை இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தற்போது வரை மாவட்டத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கான மதிப்பீடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம், வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம், பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட சேதம், பாடசாலைகளுக்கு ஏற்பட்ட சேதம் ஆகிய தொடர்பாக மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்படுவது, அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் உரியவரைச் சென்றடைவதற்கு வழிவகுப்பதாக மகிழ்ச்சி வெளிப்படுத்தப்படுகின்றது.ஒரு கிராம உத்தியோகத்தர், தான் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், எந்த ஒரு அரசியல் தலையீடும் தனக்கு ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருப்பது, கடந்த கால அனுபவங்களை விட தற்போதுள்ள நிலையில் காணப்பட்ட முன்னேற்றம் என்றும் பிரதி அமைச்சர் சுட்டி காட்டினார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரச உத்தியோகத்தர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர் என்ற வகையிலேயே அவர்கள் நோக்கப்பட வேண்டும். அவர் ஒரு அரச உத்தியோகத்தரா இல்லையா என்பது பிரச்சனையல்ல என கிராம உத்தியோகத்தர்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது நிர்வாகக் கட்டமைப்புக்கு உட்பட்டதாக, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியது கிராம முக்கியத்துவங்களின் கடமை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.