• May 07 2026

ஒரு கோடி பெறுமதியான உபகரணங்கள் திருட்டு - சந்தேகநபர் கைது!

shanu / May 7th 2026, 1:16 pm
image

ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கட்டுமான இயந்திர உபகரணங்களைத்  திருடிய ஒருவரை தலாத்துஓய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மஹனுவரை குருதேனிய மாளிகாத்தென்ன பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டிடமொன்றில் இருந்து திருடப்பட்ட கட்டுமான உபகரணங்கள் , மேலும் சில உபகரணங்களும் மீட்கப்பட்டன. 


42 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மேலும் ஒரு சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


மேலும் குறித்த பகுதிகளில் இடம்பெற்ற வீடு உடைப்பு சம்பவங்களுக்கும்  குறித்த சந்தேகநபர்கள் தொடர்புடையவர்களா என்பது குறித்து தலாத்துஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு கோடி பெறுமதியான உபகரணங்கள் திருட்டு - சந்தேகநபர் கைது ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கட்டுமான இயந்திர உபகரணங்களைத்  திருடிய ஒருவரை தலாத்துஓய பொலிஸார் கைது செய்துள்ளனர்.மஹனுவரை குருதேனிய மாளிகாத்தென்ன பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டிடமொன்றில் இருந்து திருடப்பட்ட கட்டுமான உபகரணங்கள் , மேலும் சில உபகரணங்களும் மீட்கப்பட்டன. 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மேலும் ஒரு சந்தேகநபரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் குறித்த பகுதிகளில் இடம்பெற்ற வீடு உடைப்பு சம்பவங்களுக்கும்  குறித்த சந்தேகநபர்கள் தொடர்புடையவர்களா என்பது குறித்து தலாத்துஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement