• Aug 02 2025

வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு எமனான டிப்பர்; மைத்துனன் பொலிஸில் சரண்

Chithra / Aug 2nd 2025, 3:00 pm
image


வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். 

வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம்  பகுதியில், நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டு ஒழுங்கையில்  உறங்கிக் கொண்டிருந்துள்ளார். 

இதன்போது அவரது மைத்துனரால் செலுத்தப்பட்ட ரிப்பர் வாகனம் குறித்த குடும்பஸ்த்தர் மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.


இரவு நேரம் என்பதால் குறித்த ஒழுங்கையில் அவர் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில் வீடொன்றில் சல்லிக்கல்லினை பறித்துவிட்டு வாகனத்தை திருப்பிய போது இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. 

இன்று காலையிலே குறித்த குடும்பஸ்தர் வாகனத்துள் நசுங்கி  உயிரிழந்ததை அறிந்த மைத்துனரான வாகன சாரதி நெடுங்கேணிப் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக அறியமுடிகிறது. 


வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தருக்கு எமனான டிப்பர்; மைத்துனன் பொலிஸில் சரண் வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம்  பகுதியில், நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டு ஒழுங்கையில்  உறங்கிக் கொண்டிருந்துள்ளார். இதன்போது அவரது மைத்துனரால் செலுத்தப்பட்ட ரிப்பர் வாகனம் குறித்த குடும்பஸ்த்தர் மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.இரவு நேரம் என்பதால் குறித்த ஒழுங்கையில் அவர் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில் வீடொன்றில் சல்லிக்கல்லினை பறித்துவிட்டு வாகனத்தை திருப்பிய போது இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இன்று காலையிலே குறித்த குடும்பஸ்தர் வாகனத்துள் நசுங்கி  உயிரிழந்ததை அறிந்த மைத்துனரான வாகன சாரதி நெடுங்கேணிப் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக அறியமுடிகிறது. 

Advertisement

Advertisement

Advertisement