யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் வளர்ப்பு ஆடு ஒன்றைத் திருடி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (01.11.2026) இரவு வேலணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முற்பகல் வேலணை பகுதியில் வளர்ப்பு ஆடு ஒன்றைத் திருடிய இருவரும் அதனைப் பற்றைக்குள் கட்டி வைத்துள்ளனர்.
இதனிடையே, தனது ஆடு காணாமல் போனதை அறிந்த அதன் உரிமையாளர் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார்.
இந்நிலையில், இருவர் மீது சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் அவர்களைக் கண்காணித்து வந்துள்ளனர்.
இதன்போது, இரவு 7 மணியளவில் திருடப்பட்ட ஆட்டை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவரையும் ஊர் இளைஞர்கள் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து, ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வேலணையைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
அத்துடன், திருடப்பட்ட ஆடு மற்றும் அதனைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இருவரைக் கையும் மெய்யுமாகப் பிடித்த ஊர் இளைஞர்கள் - யாழில் பரபரப்பு - நடந்தது என்ன யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் வளர்ப்பு ஆடு ஒன்றைத் திருடி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (01.11.2026) இரவு வேலணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முற்பகல் வேலணை பகுதியில் வளர்ப்பு ஆடு ஒன்றைத் திருடிய இருவரும் அதனைப் பற்றைக்குள் கட்டி வைத்துள்ளனர்.இதனிடையே, தனது ஆடு காணாமல் போனதை அறிந்த அதன் உரிமையாளர் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார்.இந்நிலையில், இருவர் மீது சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் அவர்களைக் கண்காணித்து வந்துள்ளனர்.இதன்போது, இரவு 7 மணியளவில் திருடப்பட்ட ஆட்டை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட இருவரையும் ஊர் இளைஞர்கள் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.இதனையடுத்து, ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வேலணையைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.அத்துடன், திருடப்பட்ட ஆடு மற்றும் அதனைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.