நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாகப் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, ஏழு மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல், தென், சப்ரகமுவ, ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலேயே இவ்வாறு டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் 130 பிரதேச செயலகப் பிரிவுகளில் டெங்கு நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 13 மாவட்டங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் சுமார் ஒரு இலட்சத்து 5,550 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
எனவே, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றி, சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஏழு மாகாணங்கள் பெரும் ஆபத்தில் - நவம்பர் 9 முதல் விசேட நடவடிக்கை நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாகப் பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, ஏழு மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.மேல், தென், சப்ரகமுவ, ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலேயே இவ்வாறு டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.மேலும், நாட்டின் 130 பிரதேச செயலகப் பிரிவுகளில் டெங்கு நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 13 மாவட்டங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் சுமார் ஒரு இலட்சத்து 5,550 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.எனவே, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றி, சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.