நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் இடைநிலை விசா நிராகரிப்புகளால், குக் தீவுகளில் சுமார் மூன்று ஆண்டுகளாகத் தவித்து வரும் இலங்கைப் பெண் ஒருவரை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
50 வயதான ருசிரா ரணசிங்க என்ற பெண், தனது ஒரே மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை திரும்ப முடியாமல் தவித்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாகத் தனது சிறிய ரி-ஷர்ட் தொழிற்சாலையை மூடிவிட்டு அவர் வெளிநாடு சென்றுள்ளார். முதலில் ஹொங்கொங்கில் பராமரிப்புப் பணியாளராகப் பணியாற்றிய அவர், 2022ஆம் ஆண்டு டிசம்பரில் நியூசிலாந்துக்குச் சென்று புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்.
இதன்போது, குடிவரவு ஆலோசனை நிறுவனமொன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய, தற்காலிகமாக நியூசிலாந்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டிலிருந்து வேலைவாய்ப்பு விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காகக் குக் தீவுகளுக்குச் சென்றுள்ளார்.
எனினும், அவரது வேலைவாய்ப்பு விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதுடன், நியூசிலாந்தை விட்டு வெளியேறியதால் ஏற்கனவே பெற்றிருந்த புகலிடத்துடன் தொடர்புடைய விசா நிபந்தனைகளையும் அவர் மீறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து ஊடாகப் பயணிப்பதற்காக மூன்று தடவைகளும், அவுஸ்திரேலியா ஊடாகப் பயணிப்பதற்காக நான்கு தடவைகளும் இடைநிலை விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஹவாய் மற்றும் தஹித்தி ஊடாகப் பயணித்து நாடு திரும்புவதற்கான அவரது முயற்சிகளும் விசா மற்றும் உயிரியல் அடையாளப் பதிவு தொடர்பான தேவைகள் காரணமாகத் தோல்வியடைந்துள்ளன.
இந்நிலையில், நவம்பர் மாதம் தனது ஒரே மகனுக்குத் திருமணம் நடைபெறவுள்ளதால், எப்படியாவது இலங்கைக்குத் திரும்ப விரும்புவதாக ருசிரா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குக் தீவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அவருக்கு இலவசமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களும் அவருக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறான சூழலில், ருசிரா ரணசிங்கவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாக பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளது.
வெலிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், நியூசிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முயற்சித்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மகனின் திருமணத்தைக் காண ஏங்கும் இலங்கை தாய் 3 ஆண்டுகளாக குக் தீவில் தவிப்பு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் இடைநிலை விசா நிராகரிப்புகளால், குக் தீவுகளில் சுமார் மூன்று ஆண்டுகளாகத் தவித்து வரும் இலங்கைப் பெண் ஒருவரை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருகிறது.50 வயதான ருசிரா ரணசிங்க என்ற பெண், தனது ஒரே மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை திரும்ப முடியாமல் தவித்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.2018ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாகத் தனது சிறிய ரி-ஷர்ட் தொழிற்சாலையை மூடிவிட்டு அவர் வெளிநாடு சென்றுள்ளார். முதலில் ஹொங்கொங்கில் பராமரிப்புப் பணியாளராகப் பணியாற்றிய அவர், 2022ஆம் ஆண்டு டிசம்பரில் நியூசிலாந்துக்குச் சென்று புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்.இதன்போது, குடிவரவு ஆலோசனை நிறுவனமொன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய, தற்காலிகமாக நியூசிலாந்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டிலிருந்து வேலைவாய்ப்பு விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காகக் குக் தீவுகளுக்குச் சென்றுள்ளார்.எனினும், அவரது வேலைவாய்ப்பு விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதுடன், நியூசிலாந்தை விட்டு வெளியேறியதால் ஏற்கனவே பெற்றிருந்த புகலிடத்துடன் தொடர்புடைய விசா நிபந்தனைகளையும் அவர் மீறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து ஊடாகப் பயணிப்பதற்காக மூன்று தடவைகளும், அவுஸ்திரேலியா ஊடாகப் பயணிப்பதற்காக நான்கு தடவைகளும் இடைநிலை விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.மேலும், ஹவாய் மற்றும் தஹித்தி ஊடாகப் பயணித்து நாடு திரும்புவதற்கான அவரது முயற்சிகளும் விசா மற்றும் உயிரியல் அடையாளப் பதிவு தொடர்பான தேவைகள் காரணமாகத் தோல்வியடைந்துள்ளன.இந்நிலையில், நவம்பர் மாதம் தனது ஒரே மகனுக்குத் திருமணம் நடைபெறவுள்ளதால், எப்படியாவது இலங்கைக்குத் திரும்ப விரும்புவதாக ருசிரா தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், குக் தீவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அவருக்கு இலவசமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களும் அவருக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகின்றனர்.இவ்வாறான சூழலில், ருசிரா ரணசிங்கவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாக பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளது.வெலிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், நியூசிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முயற்சித்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.