வரலாற்றில் முதன்முறையாக நெல் பயிர்ச்செய்கைக்கு மேலதிகமாக மேலும் 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
வேறு எந்த அரசாங்கமும் வழங்காத மிகப்பெரிய அளவிலான நிதியை, தற்போதைய அரசாங்கம் பயிர்ச்செய்கை மானியமாக விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறித்த மானியத் தொகையை உரம் கொள்வனவு செய்வதற்கும், பயிர்ச் சேதங்களை ஈடுசெய்வதற்கும் அல்லது நிலத்தைச் சீரமைப்பதற்கும் எனத் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நெல் பயிரிடப்படும் நிலங்களில் மேலதிகமாக ஏனைய பயிர்களைச் செய்கை செய்யும் விவசாயிகளுக்கும், நெல் பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படும் அதே அளவிலான மானியம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நெல் உள்ளிட்ட மொத்தம் 13 பயிர்களுக்கு இந்த மானியத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நிதி உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
நெல் பயிர்ச்செய்கைக்கு மாத்திரமன்றி மேலும் 12 பயிர்களுக்கும் விவசாய மானியம் வரலாற்றில் முதன்முறையாக நெல் பயிர்ச்செய்கைக்கு மேலதிகமாக மேலும் 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.வேறு எந்த அரசாங்கமும் வழங்காத மிகப்பெரிய அளவிலான நிதியை, தற்போதைய அரசாங்கம் பயிர்ச்செய்கை மானியமாக விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறித்த மானியத் தொகையை உரம் கொள்வனவு செய்வதற்கும், பயிர்ச் சேதங்களை ஈடுசெய்வதற்கும் அல்லது நிலத்தைச் சீரமைப்பதற்கும் எனத் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், நெல் பயிரிடப்படும் நிலங்களில் மேலதிகமாக ஏனைய பயிர்களைச் செய்கை செய்யும் விவசாயிகளுக்கும், நெல் பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படும் அதே அளவிலான மானியம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதன்படி, நெல் உள்ளிட்ட மொத்தம் 13 பயிர்களுக்கு இந்த மானியத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த நிதி உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.