வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.
வழமைபோன்று காலை விசேட பூசைகள் இடம்பெற்று முருகனுக்கு அபிஷேகம் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உள்வீதியுலா வந்த முருகன் வெளிவீதியில் பக்தர்கள் புடைசூழ தேரில் பவனி வந்தார்.
பல்லாயிரக்கணக்கான மக்களின் அரோகரா கோஷத்துடன் அழகாக எளிமையாக தேரில் சந்நிதியான் பவனி வந்தார்.
சந்நிதியான் தேரில் பவனி வரும் காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் வழமைபோன்று திரண்டு சென்றுள்ளது.
அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பல பாகங்களில் இருந்தும் மக்கள் திரண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
தேரேறி வலம் வந்த செல்வச்சந்நிதி முருகன்; அருள் வேண்டி புடைசூழ்ந்த பக்தர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. வழமைபோன்று காலை விசேட பூசைகள் இடம்பெற்று முருகனுக்கு அபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உள்வீதியுலா வந்த முருகன் வெளிவீதியில் பக்தர்கள் புடைசூழ தேரில் பவனி வந்தார். பல்லாயிரக்கணக்கான மக்களின் அரோகரா கோஷத்துடன் அழகாக எளிமையாக தேரில் சந்நிதியான் பவனி வந்தார். சந்நிதியான் தேரில் பவனி வரும் காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் வழமைபோன்று திரண்டு சென்றுள்ளது. அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பல பாகங்களில் இருந்தும் மக்கள் திரண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.