• Apr 27 2026

சுகாதார அமைச்சின் சுபசிரிபாய அலுவலக சிற்றுண்டிசாலைக்கு சீல் வைப்பு!

shanu / Feb 27th 2026, 3:32 pm
image

கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் சுபசிரிபாய பிரதான காரியாலயத்தில் இயங்கி வந்த சிற்றூண்டிசாலை மீது மருதானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள்  மேற்கொண்ட ஆய்வுக்கு அமைவாக உணவகத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


அதன் அடிப்படையில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த உணவகத்தை சுகாதார துறையினர் சீல் வைத்துள்ளனர். 


குறித்த உணவகம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் அலுவலக ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுக்கு அமைய குறித்த சிற்றூண்டிசாலைக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


நாட்டின் சுகாதாரத்தின் மையப்பகுதியான சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் சிற்றூண்டி சாலையே சுகாதாரமற்ற முறையில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுகாதார அமைச்சின் சுபசிரிபாய அலுவலக சிற்றுண்டிசாலைக்கு சீல் வைப்பு கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் சுபசிரிபாய பிரதான காரியாலயத்தில் இயங்கி வந்த சிற்றூண்டிசாலை மீது மருதானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள்  மேற்கொண்ட ஆய்வுக்கு அமைவாக உணவகத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுஅதன் அடிப்படையில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த உணவகத்தை சுகாதார துறையினர் சீல் வைத்துள்ளனர். குறித்த உணவகம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் அலுவலக ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுக்கு அமைய குறித்த சிற்றூண்டிசாலைக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுநாட்டின் சுகாதாரத்தின் மையப்பகுதியான சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் சிற்றூண்டி சாலையே சுகாதாரமற்ற முறையில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement