• Jul 10 2025

வலிகாமம் வடக்கிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்றும் தொடரும் போராட்டம்

Chithra / Jun 22nd 2025, 11:51 am
image


வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய தொடர் போராட்டம்  இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதி வழிப் போராட்டம் நேற்று முதல் இடம்பெற்று வருகிறது. 

மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது. 

ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர். 

இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர் காணிகளையும் முழுமையாக விடுவிப்பதே தமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்ற நோக்கில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


வலிகாமம் வடக்கிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்றும் தொடரும் போராட்டம் வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய தொடர் போராட்டம்  இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதி வழிப் போராட்டம் நேற்று முதல் இடம்பெற்று வருகிறது. மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது. ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர். இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர் காணிகளையும் முழுமையாக விடுவிப்பதே தமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்ற நோக்கில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now