• Jul 09 2025

60 நாள்கள் – தினமும் 9 மணி நேரம் தூங்கி 9 லட்சம் வென்ற இளம்பெண்!

Thansita / Jul 8th 2025, 7:04 pm
image

பெண்ணொருவர் 9 மணிநேரம் தூங்கி 9 லட்சம் ரூபா பரிசுத்தொகையை வென்றுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகின்றது. 

பெங்களூருவை தளமாக கொண்டு இயங்கி வரும்  வேக் பிற்  என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, கடந்த 4 ஆண்டுகளாக ஸ்லீப் இன்ரன்சிப் நடத்தி வருகிறது.  

இந்த ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டிக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததில், 15 பேர் போட்டிக்கு  தெரிவு  செய்யப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட 15 போட்டியாளர்களுக்கு வேக்ஃபிட் மெத்தைகள் மற்றும் தொடர்பு இல்லாத தூக்க கண்காணிப்பு சாதனங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம், அவர்களின் தூக்க நேரம் மற்றும் தூக்கத்தின் தரம் கண்காணிக்கப்பட்டது.

இதில் கலந்து கொள்பவர்கள் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கு, குறைந்தது 9 மணி நேரங்கள் தூங்க வேண்டும். இதில், கண்ணை கட்டி படுக்கையை தயார் செய்வது போன்ற சில செயல்பாடுகள் இருக்கும்.

போட்டியின் இறுதியில் 60 நாட்கள் 9 மணிநேரம் தூங்கி புனேவைச் சேர்ந்த 22 வயதான பூஜா மாதவ் என்ற இளம்பெண் சாம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் அவருக்கு  9 லட்சம் ரூபா பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.  குறித்த பெண் பூஜா, ஐபி.எ.எஸ் ஆகும் ஆசையில், UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

வெற்றி பெற்ற பின்னர் இது பற்றித் தெரிவித்த அவர்,

"நான் இரவில் 4-5 மணி நேரம் மட்டுமே தூங்குவேன். இந்த பயிற்சி எனக்கு வழக்கமான தூக்கத்தின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுத்தது. இப்போது நான் 9 மணி நேரம் தூங்குகிறேன், முன்பை விட அதிக சுறுசுறுப்பாக உணர்கிறேன்" என தெரிவித்துள்ளார்.  

இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி “நாங்களும் போட்டியில் பங்குபற்றலாமா என்ற ரீதியில் பலரும் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

60 நாள்கள் – தினமும் 9 மணி நேரம் தூங்கி 9 லட்சம் வென்ற இளம்பெண் பெண்ணொருவர் 9 மணிநேரம் தூங்கி 9 லட்சம் ரூபா பரிசுத்தொகையை வென்றுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகின்றது. பெங்களூருவை தளமாக கொண்டு இயங்கி வரும்  வேக் பிற்  என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, கடந்த 4 ஆண்டுகளாக ஸ்லீப் இன்ரன்சிப் நடத்தி வருகிறது.  இந்த ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டிக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததில், 15 பேர் போட்டிக்கு  தெரிவு  செய்யப்பட்டனர்.தெரிவு செய்யப்பட்ட 15 போட்டியாளர்களுக்கு வேக்ஃபிட் மெத்தைகள் மற்றும் தொடர்பு இல்லாத தூக்க கண்காணிப்பு சாதனங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம், அவர்களின் தூக்க நேரம் மற்றும் தூக்கத்தின் தரம் கண்காணிக்கப்பட்டது.இதில் கலந்து கொள்பவர்கள் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கு, குறைந்தது 9 மணி நேரங்கள் தூங்க வேண்டும். இதில், கண்ணை கட்டி படுக்கையை தயார் செய்வது போன்ற சில செயல்பாடுகள் இருக்கும்.போட்டியின் இறுதியில் 60 நாட்கள் 9 மணிநேரம் தூங்கி புனேவைச் சேர்ந்த 22 வயதான பூஜா மாதவ் என்ற இளம்பெண் சாம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் அவருக்கு  9 லட்சம் ரூபா பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.  குறித்த பெண் பூஜா, ஐபி.எ.எஸ் ஆகும் ஆசையில், UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறார்.வெற்றி பெற்ற பின்னர் இது பற்றித் தெரிவித்த அவர்,"நான் இரவில் 4-5 மணி நேரம் மட்டுமே தூங்குவேன். இந்த பயிற்சி எனக்கு வழக்கமான தூக்கத்தின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுத்தது. இப்போது நான் 9 மணி நேரம் தூங்குகிறேன், முன்பை விட அதிக சுறுசுறுப்பாக உணர்கிறேன்" என தெரிவித்துள்ளார்.  இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி “நாங்களும் போட்டியில் பங்குபற்றலாமா என்ற ரீதியில் பலரும் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement