• Mar 10 2026

அரச உயர் பதவிகளில் பெண் ஆளுமைகளின் வகிபாகம் வரவேற்கத் தக்கது-கொட்டகலை பிரதேச சபைத் தலைவர்!

shanu / Mar 10th 2026, 1:37 pm
image

அரசாங்கத்தின் உயர் பதவிகள் உட்பட பலவேறு நிறுவனங்களிலும். திணைக்களங்களிலும் பெண் ஆளுமைகளின் வகிபாகம்  குறிப்பிடத் தக்க வகையில் முன்னேற்றம்  கண்டுள்ளது. அதற்குக் காரணம் அவர்களின் கல்வித் திறனாகும். அது மலையகத்தின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் வழிவகுக்க வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.


கொட்டகலை பிரதேச சபையின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) ரிஷிகேஷ் மண்டபத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.


மத்திய மாகாண உள்ளூராட்சித் திணைக்கள ஆணையாளர் திருமதி சி.கே. அத்தபத்து, உதவி ஆணையாளர்கள், வைத்திய அதிகாரி சுதர்சன் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பிரதேச சபைக்குட்பட்ட சுமார் 400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.


அவர் தொடர்ந்து பேசுகையில்,

பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றார்கள். மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர், நுவரெலியா உதவி ஆணையாளர் என அனைவரும் பெண்களாக இருப்பதோடு, எமது பிரதேச சபையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களில் 80 வீதமானோரும் பெண்களே ஆவார்கள். உப தலைவரோடு நான்கு பெண்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். பெண்களின் ஆளுமை துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. இது ஏனைய பெண்களுக்கு உதாரணமாகவும் எடுத்துக் காட்டாகவும் அமைய வேண்டும். பெண்கள் சமுகத்தில் மதிக்கப்பட வேண்டும்


கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை உட்கொண்டு சுகதேகிகளாக விளங்கவும், குழந்தைகள் எடை குறையாமல் பிறக்கவும் ஒவ்வொரு மகளிர் தினத்திலும் போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். உள்ளூராட்சி ஆணையாளர் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதோடு, சகல உறுப்பினர்களும் ஒத்துழைப்பு  வழங்கி வருவதோடு, நல்ல மனம் படைத்த உள்ளங்களும் பங்களிப்பு செய்து வருகின்றமை வரவேற்கத் தக்கது.


எமது வேலைத் திட்டம் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வரும் உத்தியோகத்தர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


அரச உயர் பதவிகளில் பெண் ஆளுமைகளின் வகிபாகம் வரவேற்கத் தக்கது-கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் அரசாங்கத்தின் உயர் பதவிகள் உட்பட பலவேறு நிறுவனங்களிலும். திணைக்களங்களிலும் பெண் ஆளுமைகளின் வகிபாகம்  குறிப்பிடத் தக்க வகையில் முன்னேற்றம்  கண்டுள்ளது. அதற்குக் காரணம் அவர்களின் கல்வித் திறனாகும். அது மலையகத்தின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் வழிவகுக்க வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.கொட்டகலை பிரதேச சபையின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) ரிஷிகேஷ் மண்டபத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.மத்திய மாகாண உள்ளூராட்சித் திணைக்கள ஆணையாளர் திருமதி சி.கே. அத்தபத்து, உதவி ஆணையாளர்கள், வைத்திய அதிகாரி சுதர்சன் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பிரதேச சபைக்குட்பட்ட சுமார் 400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.அவர் தொடர்ந்து பேசுகையில்,பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றார்கள். மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர், நுவரெலியா உதவி ஆணையாளர் என அனைவரும் பெண்களாக இருப்பதோடு, எமது பிரதேச சபையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களில் 80 வீதமானோரும் பெண்களே ஆவார்கள். உப தலைவரோடு நான்கு பெண்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். பெண்களின் ஆளுமை துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. இது ஏனைய பெண்களுக்கு உதாரணமாகவும் எடுத்துக் காட்டாகவும் அமைய வேண்டும். பெண்கள் சமுகத்தில் மதிக்கப்பட வேண்டும்கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை உட்கொண்டு சுகதேகிகளாக விளங்கவும், குழந்தைகள் எடை குறையாமல் பிறக்கவும் ஒவ்வொரு மகளிர் தினத்திலும் போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். உள்ளூராட்சி ஆணையாளர் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதோடு, சகல உறுப்பினர்களும் ஒத்துழைப்பு  வழங்கி வருவதோடு, நல்ல மனம் படைத்த உள்ளங்களும் பங்களிப்பு செய்து வருகின்றமை வரவேற்கத் தக்கது.எமது வேலைத் திட்டம் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வரும் உத்தியோகத்தர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement