• Jul 19 2025

செம்பியன் பற்று பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

shanuja / Jul 18th 2025, 2:39 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பாலத்தின் புனரமைப்பு பணிகள் இன்று (18) ஆரம்பமானது. 


செம்பியன் பற்று - மாமுனை இணைப்பு வீதியில் பல காலமாக உடைந்து காணப்பட்ட குறித்த பாலம் பருத்தித்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் புனரமக்கப்படவுள்ளது. 


பாலத்தின் உடைவால் செம்பியன் பற்று மற்றும் மாமுனை கிராம மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை பயணத்திலும் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ளனர்.  


அத்துடன் செம்பியன் பற்று மாமுனை வழியாக வரும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது போக்குவரத்து  வழித்தடத்தில் பாலத்தினை காரணம் காட்டி தமது பணியையும் பல தடவை புறக்கணித்துள்ளது. 


கடந்த 2ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ்,  செம்பியன் பற்று மாமுனை மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த வீதியினையும் பாலத்தினையும் பார்வையிட்டு இரண்டு கிழமைகளில் இதற்கான புணரமைப்பு வேலைகள் இடம்பெறும் எனத் தெரிவித்திருந்தார். 


இந்தநிலையில்  பருத்தித்துறை பிரதேச சபையின் விசேட திட்டத்தின் கீழ் பாலத்தின் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செம்பியன் பற்று பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம் யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பாலத்தின் புனரமைப்பு பணிகள் இன்று (18) ஆரம்பமானது. செம்பியன் பற்று - மாமுனை இணைப்பு வீதியில் பல காலமாக உடைந்து காணப்பட்ட குறித்த பாலம் பருத்தித்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் புனரமக்கப்படவுள்ளது. பாலத்தின் உடைவால் செம்பியன் பற்று மற்றும் மாமுனை கிராம மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை பயணத்திலும் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ளனர்.  அத்துடன் செம்பியன் பற்று மாமுனை வழியாக வரும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது போக்குவரத்து  வழித்தடத்தில் பாலத்தினை காரணம் காட்டி தமது பணியையும் பல தடவை புறக்கணித்துள்ளது. கடந்த 2ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ்,  செம்பியன் பற்று மாமுனை மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த வீதியினையும் பாலத்தினையும் பார்வையிட்டு இரண்டு கிழமைகளில் இதற்கான புணரமைப்பு வேலைகள் இடம்பெறும் எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில்  பருத்தித்துறை பிரதேச சபையின் விசேட திட்டத்தின் கீழ் பாலத்தின் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement