• Apr 25 2026

தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி செய்தும் கைகூடாததன் வெளிப்பாடே நெடுந்தீவு மக்கள் வீதிக்கிறங்கக் காரணம்!

shanu / Apr 25th 2026, 3:19 pm
image

தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாத நிலையில் அல்லது அவ்வாறான ஏதுநிலை உருவாக்கலில் ஏற்பட்ட இயலாமையால் தான் நெடுந்தீவு மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். 


இது அவர்களில் இறுதி அஸ்திரமாகவே இருக்கும். இவ்வாறான நிலை அந்த மக்களுக்கு வந்தமை இட்டு தான் கவலையடைவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


தமது அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வை தரக்கோரி நெடுந்தீவில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  தெரிவிக்கையில், 


தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் நெடுந்தீவு மக்கள் தமக்கான தேவைகளை பெற்றுக்கொள்ள குறிப்பாக தொடர்பு கொண்டு தமக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள் பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாதபடியினால் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று நடத்தியிருந்தார்கள். இது அவர்களின் ஜனநாயக உரிமையும்கூட. 


90 களின் ஆரம்பத்தில் தீவகப் பகுதிகுள் அரச படையினரால் விடுவிக்கப்பட்ட பின்னர் அன்றைய அரசு சக தமிழ் கட்சிகளுக்கு மக்கள் பணிகளில் ஈடுபட வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அன்று எந்த கட்சிகளும் அதற்கு முன்வரவில்லை. அதன் பின்னரே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று நாம் அங்கு சென்றிருந்தோம்.  


அப்போது அங்கு வாழ்ந்த மக்கள் எதிர்கொண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு எமக்கு இருந்தது. அவற்றை அனைத்த வழிகளிலும் செய்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பான அமைதியான வாழ்வியலை ஏற்படுத்திக் கொடுத்திருந்திருக்கின்றோம். 


குறிப்பாக நெடுந்தீவை சேர்ந்த மக்கள் தமது மூத்த பிரதிநிதிகளு+டா எம்மை சந்தித்திருந்தார்கள்.  இதன்போது தாம் பட்டினியில் எல்லையில் இருக்கின்றோம் என்றும் தமது வாழ்க்கையை பாதுகாத்து தருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்கள். அவர்களின் அழைப்பின் பேரில்தான் நாம் நெடுந்தீவு சென்றிருந்தோம்.


இதேநேரம் நாம் செல்லும்போது பாதுகாப்பு தரப்பினர் எம்முடன் வந்திருக்கவில்லை. நாம் தனியாகச் சென்றுதான் அந்த மக்களின் துயரங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருந்தோம். இதே நேரம் படைத்தரப்போ ஏனைய தரப்பினரோ அங்கு சென்றிருந்தால் தமக்கு எதிரான தரப்பினரை பழிவாங்கியிருந்திருக்கலாம். இதனூடாக உயிர் இழப்புகளும் ஏற்பட்டிருக்கலாம். 


ஆனால் எனது தலைமையில் எமது கட்சி உறுப்பினர்கள் அங்கு சென்றிருந்தமையால் எந்த ஒரு உயிரிழப்போ பழிவாங்கல்களோ ஏற்பட்டிருக்கவில்லை. குறிப்பாக நெடுந்தீவு மக்கள் தமது எந்த பிரச்சினையானாலும் சரி குறிப்பாக காச்சல் வந்தால் கூட அதற்கான தீர்வைபெற எமக்கே தொடர்புகளை மேற்கொள்வார்கள். ஆனால் சமீப காலமாக குறிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அந்த மக்களுக்கு யாருடனும் தொடர்புகொண்டு தமக்கான தீர்வுகளை பெற அல்லது சூழ்நலையை ஏற்படுத்திக்கொள்ள இயலாமையால் பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாதபடியினால் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று நடத்தியிருந்தார்கள்.


சமீபத்தில் கூட எமது கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கின ஆளுநரை சந்தித்து நெடு;தீவு மக்கள் மட்டுமல்லாது கால்நடைகள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சுட்டிக்காட்டி தீர்வை வழங்குமாறு கோரியிருந்தனர். அதற்கு ஆளுநரும் சாதகமான பதிலை வழங்கியிருந்தார். அந்தவகையில் தற்போதைய போக்கின்படி பார்த்தல் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 


இதேநேரம் கடந்தகாலங்களில் சரியாக கையாளப்படவில்லை என்று சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். ஆனால் நாம் எங்களால் முடிந்தளவு அந்த மக்களுக்கான சேவைகளை செய்திருக்கின்றோம். இது அங்குவாழும் பிரதசே மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.

தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி செய்தும் கைகூடாததன் வெளிப்பாடே நெடுந்தீவு மக்கள் வீதிக்கிறங்கக் காரணம் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாத நிலையில் அல்லது அவ்வாறான ஏதுநிலை உருவாக்கலில் ஏற்பட்ட இயலாமையால் தான் நெடுந்தீவு மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இது அவர்களில் இறுதி அஸ்திரமாகவே இருக்கும். இவ்வாறான நிலை அந்த மக்களுக்கு வந்தமை இட்டு தான் கவலையடைவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமது அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வை தரக்கோரி நெடுந்தீவில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  தெரிவிக்கையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் நெடுந்தீவு மக்கள் தமக்கான தேவைகளை பெற்றுக்கொள்ள குறிப்பாக தொடர்பு கொண்டு தமக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ள் பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாதபடியினால் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று நடத்தியிருந்தார்கள். இது அவர்களின் ஜனநாயக உரிமையும்கூட. 90 களின் ஆரம்பத்தில் தீவகப் பகுதிகுள் அரச படையினரால் விடுவிக்கப்பட்ட பின்னர் அன்றைய அரசு சக தமிழ் கட்சிகளுக்கு மக்கள் பணிகளில் ஈடுபட வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அன்று எந்த கட்சிகளும் அதற்கு முன்வரவில்லை. அதன் பின்னரே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று நாம் அங்கு சென்றிருந்தோம்.  அப்போது அங்கு வாழ்ந்த மக்கள் எதிர்கொண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு எமக்கு இருந்தது. அவற்றை அனைத்த வழிகளிலும் செய்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பான அமைதியான வாழ்வியலை ஏற்படுத்திக் கொடுத்திருந்திருக்கின்றோம். குறிப்பாக நெடுந்தீவை சேர்ந்த மக்கள் தமது மூத்த பிரதிநிதிகளு+டா எம்மை சந்தித்திருந்தார்கள்.  இதன்போது தாம் பட்டினியில் எல்லையில் இருக்கின்றோம் என்றும் தமது வாழ்க்கையை பாதுகாத்து தருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்கள். அவர்களின் அழைப்பின் பேரில்தான் நாம் நெடுந்தீவு சென்றிருந்தோம்.இதேநேரம் நாம் செல்லும்போது பாதுகாப்பு தரப்பினர் எம்முடன் வந்திருக்கவில்லை. நாம் தனியாகச் சென்றுதான் அந்த மக்களின் துயரங்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருந்தோம். இதே நேரம் படைத்தரப்போ ஏனைய தரப்பினரோ அங்கு சென்றிருந்தால் தமக்கு எதிரான தரப்பினரை பழிவாங்கியிருந்திருக்கலாம். இதனூடாக உயிர் இழப்புகளும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எனது தலைமையில் எமது கட்சி உறுப்பினர்கள் அங்கு சென்றிருந்தமையால் எந்த ஒரு உயிரிழப்போ பழிவாங்கல்களோ ஏற்பட்டிருக்கவில்லை. குறிப்பாக நெடுந்தீவு மக்கள் தமது எந்த பிரச்சினையானாலும் சரி குறிப்பாக காச்சல் வந்தால் கூட அதற்கான தீர்வைபெற எமக்கே தொடர்புகளை மேற்கொள்வார்கள். ஆனால் சமீப காலமாக குறிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அந்த மக்களுக்கு யாருடனும் தொடர்புகொண்டு தமக்கான தீர்வுகளை பெற அல்லது சூழ்நலையை ஏற்படுத்திக்கொள்ள இயலாமையால் பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாதபடியினால் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று நடத்தியிருந்தார்கள்.சமீபத்தில் கூட எமது கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கின ஆளுநரை சந்தித்து நெடு;தீவு மக்கள் மட்டுமல்லாது கால்நடைகள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சுட்டிக்காட்டி தீர்வை வழங்குமாறு கோரியிருந்தனர். அதற்கு ஆளுநரும் சாதகமான பதிலை வழங்கியிருந்தார். அந்தவகையில் தற்போதைய போக்கின்படி பார்த்தல் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதேநேரம் கடந்தகாலங்களில் சரியாக கையாளப்படவில்லை என்று சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். ஆனால் நாம் எங்களால் முடிந்தளவு அந்த மக்களுக்கான சேவைகளை செய்திருக்கின்றோம். இது அங்குவாழும் பிரதசே மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement