• Jun 12 2026

காலிமுகத்திடல் கடலில் சோகம்; சிறுவன் உயிர் பிரிந்தது! - ஒருவரை தேடும் பணி தீவிரம்

Chithra / Jun 11th 2026, 10:22 am
image

கொழும்பு, காலி முகத்திடல் கடற்கடையில் நீராடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்கள் பலத்த கடல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படை வீரர்கள் ஒன்றிணைந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏனைய ஐந்து சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.


அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய மூவர் சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையியிலும் அனுமதிக்கப்பட்டனர்.


மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரான, மாளிகாவத்தையைச் சேர்ந்த 11 வயது சிறுவன், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.


இதற்கிடையில், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாளிகாவத்தையைச் சேர்ந்த 10 வயது சிறுவன் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 


காவல்துறை உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படை சுழியோடி குழுவினரும் அப்பகுதியில் விரிவான தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காலிமுகத்திடல் கடலில் சோகம்; சிறுவன் உயிர் பிரிந்தது - ஒருவரை தேடும் பணி தீவிரம் கொழும்பு, காலி முகத்திடல் கடற்கடையில் நீராடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்கள் பலத்த கடல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படை வீரர்கள் ஒன்றிணைந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏனைய ஐந்து சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய மூவர் சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையியிலும் அனுமதிக்கப்பட்டனர்.மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரான, மாளிகாவத்தையைச் சேர்ந்த 11 வயது சிறுவன், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.இதற்கிடையில், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாளிகாவத்தையைச் சேர்ந்த 10 வயது சிறுவன் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காவல்துறை உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படை சுழியோடி குழுவினரும் அப்பகுதியில் விரிவான தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement