கொலம்பியாவின் தெற்குப் பகுதியில் நேற்று இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 80-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு இராணுவம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.
இரண்டு படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களை ஏற்றிச் சென்ற C-130 Hercules வகை விமானம், எக்குவடோர் எல்லைக்கு அருகிலுள்ள Puerto Leguizamo பகுதியில் நேற்று காலை புறப்பட்டுள்ளது.
எனினும், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.
அந்நாட்டின் அரசு ஒளிபரப்புச் சேவை வெளியிட்டுள்ள காட்சிகளில், காடுகளுக்கு நடுவே விமானத்தின் பாகங்கள் தீப்பற்றி எரிவதுடன், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதைக் காணமுடிகிறது.
இந்த வகை விமானங்கள் பொதுவாக 100 வீரர்கள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை என்பதால், உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இராணுவத்தினர் ஏற்கனவே விபத்து நடந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
விமானம் விழுந்த பகுதி அடர்ந்த காடு என்பதால், மீட்புப் படையினர் அங்கு செல்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. எனினும், காயமடைந்தவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 1990-களுக்குப் பிறகு கொலம்பிய இராணுவம் சந்தித்துள்ள மிக மோசமான வான் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கிய விமானம்; 80க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பலியென தகவல் கொலம்பியாவின் தெற்குப் பகுதியில் நேற்று இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 80-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு இராணுவம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.இரண்டு படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களை ஏற்றிச் சென்ற C-130 Hercules வகை விமானம், எக்குவடோர் எல்லைக்கு அருகிலுள்ள Puerto Leguizamo பகுதியில் நேற்று காலை புறப்பட்டுள்ளது. எனினும், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.அந்நாட்டின் அரசு ஒளிபரப்புச் சேவை வெளியிட்டுள்ள காட்சிகளில், காடுகளுக்கு நடுவே விமானத்தின் பாகங்கள் தீப்பற்றி எரிவதுடன், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதைக் காணமுடிகிறது. இந்த வகை விமானங்கள் பொதுவாக 100 வீரர்கள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை என்பதால், உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்தச் சம்பவம் குறித்து கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:இராணுவத்தினர் ஏற்கனவே விபத்து நடந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விமானம் விழுந்த பகுதி அடர்ந்த காடு என்பதால், மீட்புப் படையினர் அங்கு செல்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. எனினும், காயமடைந்தவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 1990-களுக்குப் பிறகு கொலம்பிய இராணுவம் சந்தித்துள்ள மிக மோசமான வான் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.