நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தீயணைப்பு
வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர்
உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மொன்றியலில் இருந்து 76 பயணிகளுடன் வந்த Flight 8646 விமானம், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 4ஆவது ஓடுபாதையில் தரையிறங்கியது.
அப்போது எதிர்பாராத விதமாக, ஓடுபாதையைக் குறுக்கறுத்து வந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் பலமாக மோதியது.
விபத்து நடப்பதற்குச் சற்று முன்னர், இரவு 11:38 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்
(ATC) பதற்றத்துடன் கத்திய குரல்பதிவு தற்போது வெளியாகியுள்ளது:
ஆனால், அடுத்த சில விநாடிகளில் மோதல் நிகழ்ந்தது. சிசிடிவி காட்சிகளில் தீயணைப்பு வாகனம் பலமுறை உருண்டு கவிழ்வதும், விமானம் புகையை கக்கியபடி இழுத்துச் செல்லப்படுவதும் பதிவாகியுள்ளது.
விபத்து நிகழ்ந்த பின், தனது சக அதிகாரியிடம் தழுதழுத்த குரலில் பேசிய குறித்த கட்டுப்பாட்டாளர்,
"ஆமாம், நான் பார்த்தேன்... நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன் (I messed up)" எனத் தனது பிழையை ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு அவசரச் சூழலைக் கையாண்டு கொண்டிருந்தபோது இந்தத் தவறு நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ் விபத்தில் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்ததுடன் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
வரலாற்றுச் சுவடு 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு லாகார்டியா விமான நிலையத்தில் நிகழ்ந்த மிக மோசமான விபத்து இதுவாகும்.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "இது ஒரு பயங்கரமான விபத்து, இது மிகவும் ஆபத்தான தொழில்" எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து கனேடிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்
பரபரப்பை ஏற்படுத்திய ஏர் கனடா விமான விபத்து. வெளியானது கட்டுப்பாட்டு அறையின் திடுக்கிடும் குரல்பதிவு நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மொன்றியலில் இருந்து 76 பயணிகளுடன் வந்த Flight 8646 விமானம், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 4ஆவது ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக, ஓடுபாதையைக் குறுக்கறுத்து வந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் பலமாக மோதியது.விபத்து நடப்பதற்குச் சற்று முன்னர், இரவு 11:38 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (ATC) பதற்றத்துடன் கத்திய குரல்பதிவு தற்போது வெளியாகியுள்ளது:ஆனால், அடுத்த சில விநாடிகளில் மோதல் நிகழ்ந்தது. சிசிடிவி காட்சிகளில் தீயணைப்பு வாகனம் பலமுறை உருண்டு கவிழ்வதும், விமானம் புகையை கக்கியபடி இழுத்துச் செல்லப்படுவதும் பதிவாகியுள்ளது.விபத்து நிகழ்ந்த பின், தனது சக அதிகாரியிடம் தழுதழுத்த குரலில் பேசிய குறித்த கட்டுப்பாட்டாளர், "ஆமாம், நான் பார்த்தேன். நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன் (I messed up)" எனத் தனது பிழையை ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு அவசரச் சூழலைக் கையாண்டு கொண்டிருந்தபோது இந்தத் தவறு நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ் விபத்தில் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்ததுடன் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். வரலாற்றுச் சுவடு 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு லாகார்டியா விமான நிலையத்தில் நிகழ்ந்த மிக மோசமான விபத்து இதுவாகும்.இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "இது ஒரு பயங்கரமான விபத்து, இது மிகவும் ஆபத்தான தொழில்" எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் மார்க் கார்னி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து கனேடிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்