• Apr 19 2026

காதலனால் சீனப் பெண் குத்திக் கொலை; கொழும்பில் நடந்த பயங்கரம்

Chithra / Mar 24th 2026, 8:16 am
image

கொழும்பு - கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 


26 வயதுடைய சீன நாட்டுப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 


குறித்த பெண் கொஹுவலை, களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார். 


இந்நிலையில் அவரது முன்னாள் சீனக் காதலனாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


கொலைக்கான காரணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.


சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனால் சீனப் பெண் குத்திக் கொலை; கொழும்பில் நடந்த பயங்கரம் கொழும்பு - கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய சீன நாட்டுப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொஹுவலை, களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது முன்னாள் சீனக் காதலனாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement