• Jul 10 2025

அறிவின் மையமாக மாறும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம்!

Chithra / Jul 9th 2025, 2:37 pm
image


சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் இந்நாட்டின் அனைத்து மட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அறிவை வழங்கும் மையமாக மாற்றப்படவிருப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் Inter Pares உலகளாவிய திட்டத்தின் தலைவர் கலாநிதி ஜொனதன் மர்ஃபி (Dr.Jonathan Murph) மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் முகாமையாளர் இங்கிரிட் வோல்கர் (Ms. Ingrid Walker) உள்ளிட்ட தூதுக் குழுவினரை அண்மையில் (07) பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே சபாநாயகர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச தொடர்புகள், நிதிச் சட்டம், நிர்வாகம் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரதேச சபைகள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் தேவையான அறிவு குறித்த நிலையத்தின் ஊடாகப் பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையத்தைத் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தரமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான மையமாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியனத்தின் Inter Pares உலகளாவிய திட்டத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப தினத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், மேற்பார்வை, நிதி மற்றும் நிர்வாகம் போன்ற விடயங்களை மேம்படுத்துவது மற்றும் இவற்றின் திறன்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான திறனைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் அனுபவத்தைப் பரிமாறிக் கொள்வது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது என இந்தத் தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.


அறிவின் மையமாக மாறும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் இந்நாட்டின் அனைத்து மட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அறிவை வழங்கும் மையமாக மாற்றப்படவிருப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் Inter Pares உலகளாவிய திட்டத்தின் தலைவர் கலாநிதி ஜொனதன் மர்ஃபி (Dr.Jonathan Murph) மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் முகாமையாளர் இங்கிரிட் வோல்கர் (Ms. Ingrid Walker) உள்ளிட்ட தூதுக் குழுவினரை அண்மையில் (07) பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே சபாநாயகர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சர்வதேச தொடர்புகள், நிதிச் சட்டம், நிர்வாகம் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரதேச சபைகள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் தேவையான அறிவு குறித்த நிலையத்தின் ஊடாகப் பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையத்தைத் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தரமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான மையமாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியனத்தின் Inter Pares உலகளாவிய திட்டத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப தினத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், மேற்பார்வை, நிதி மற்றும் நிர்வாகம் போன்ற விடயங்களை மேம்படுத்துவது மற்றும் இவற்றின் திறன்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான திறனைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் அனுபவத்தைப் பரிமாறிக் கொள்வது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது என இந்தத் தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement